நீங்களே இப்படி செய்யலாமா...சென்னை அணியை வம்பிழுத்த ஸ்காட் ஸ்டைரிஸ்...வேற லெவல் பதில் கொடுத்த சிஎஸ்கே

மும்பை: ஐபிஎல் குறித்த நியூசிலாந்து முன்னாள் வீரரின் கணிப்புக்கு சென்னை அணி தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்துள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு சென்னை அணி படுதோல்வி அடையும் என கணித்திருந்தார். அவரின் கணிப்புக்கு சென்னை அணி பதில் கொடுத்துள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் பெரிய அளவில் மிஸ் செய்த நிலையில் இந்தாண்டு இந்தியாவில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை சிறப்பாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. டெல்லி அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. எனவே இந்த முறை அனைத்து அணிகளும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஸ்டாக் கணிப்பு

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு ஐபிஎல் குறித்து கணித்துள்ளார். அதன்படி தோனியின் சி.எஸ்.கே அணி இந்த முறையும் கடைசி இடத்தை பிடித்து சொதப்பும் என கூறியுள்ளார். அதே வேளையில் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்றும் டெல்லி அணி 2ம் இடம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

பஞ்சாப் அணியில் வீரர்கள் தேர்வு சிறப்பாக உள்ளதால் இந்த முறை 3வது இடம் பிடிக்கும் எனவும் ஐதராபாத் அணி 4வது இடத்தை பிடிக்கும் எனவும் ஸ்காட் தெரிவித்திருந்தார். அதே வேளையில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணி 5வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 6வது இடத்தையும் கொல்கத்தா 7வது இடத்தையும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார்.

கிண்டல்

ஸ்காட்டின் இந்த கருத்துக்கு பல அணிகளும் பதில் விமர்சனம் செய்து வரும் நிலையில் சி.எஸ்.கேவும் அதில் இணைந்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சென்னை அணி, ஸ்காட் சென்னை அணி ஜெர்ஸியில் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. மேலும், அதில் EX Machi, why? Machi?, yellow machi என கிண்டலாக குறிப்பிட்டுள்ளது. சென்னை அணியின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஸ்காட், நானே என்னை கண்டித்து கொள்கிறேன் என பதிவிட்டு, மண்ணிப்பு கேட்பது போல் GIF ஒன்றை பதிவிட்டுள்ளார். இவர்களின் குசும்பு சண்டை ட்விட்டரில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK reacts for scott Styris tweet, after he predicts 2021 also poor season forfranchise
Story first published: Sunday, April 4, 2021, 18:13 [IST]
Other articles published on Apr 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X