IPL 2021: சென்ற வருடம் விட்டதை பிடிக்குமா சிஎஸ்கே? பிளே ஆஃப் நுழைய இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை?

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்க்குள் நுழைய இன்னும் எத்தனை வெற்றிகள் தேவைப்படுகிறது என்பதே இந்த செய்தி.

Faf, Bravo Injury! Sam, Moeen to Miss Play-Off! IPL 2021 CSK | OneIndia Tamil

ஒருவழியாக, இங்கிலாந்து தொடர் களேபரத்தை ரசிகர்கள் இப்போது தான் மறக்க தொடங்கி இருக்கிறார்கள். என்ன களேபரமா? சரியாப்போச்சு போங்க!

ஐபிஎல்-காக புதிய ஜெர்ஸி.. ஆர்சிபி அணி போட்டுள்ள தனி ரூட்.. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய வீடியோ!ஐபிஎல்-காக புதிய ஜெர்ஸி.. ஆர்சிபி அணி போட்டுள்ள தனி ரூட்.. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய வீடியோ!

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இந்திய அணியின் பிஸியோ யோகேஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட, இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்துவிட்டது.

மீண்டும் ஐபிஎல்

மீண்டும் ஐபிஎல்

ஏற்கனவே இந்திய அணியின் கோச் உட்பட மற்ற நிர்வாகிகள் கொரோனா வார்டில் அல்லாடிக் கொண்டிருக்க, கடைசியாக அணியில் மிச்சமிருந்த ஒரேயொரு பிஸியோவும் கொரோனாவால் பாதிக்கப்பட பீதியடைந்த இந்திய வீரர்கள் கடைசி டெஸ்ட்டில் விளையாட மறுப்பு தெரிவிக்க, அதன் பிறகு நடந்ததை வரலாறு அறியும். இப்போ ஐபிஎல் மேட்டருக்கு வருவோம். வரும் செப்.19ம் தேதி இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளன. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மல்லுக்கட்டுகின்றன.

கம்பேக் சிஎஸ்கே

கம்பேக் சிஎஸ்கே

இதில், கடந்த முறை.. அதாவது 2020 சீசனில் இதே அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று கம்பீரமாக இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு வலிமையான ரன் ரேட் கிடையாது. அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது தோனி படை.

6 புள்ளிகள்

6 புள்ளிகள்

டெல்லி அணிக்கு எதிராக முதல் போட்டியிலும், கொரோனா காரணமாக தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக விளையாடிய மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்திருந்தது. ஸோ, இப்போது இன்னும் எத்தனை போட்டிகளில் விளையாடினால் சிஎஸ்கே பிளே ஆஃப் முன்னேறும் என்று பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வைத்திருக்கும் புள்ளிகள் 10. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். இவ்வளவு தூரம் கடந்த வந்த தோனிக்கு, இன்னும் 3 போட்டிகளில் வெல்வது ஒரு விஷயமே அல்ல. கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன. அதுவும், மிக மிக வலிமையான ரன் ரேட்டும் கொண்டுள்ள சிஎஸ்கே, இத்தொடரில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு ஜீரோ எனலாம்.

டு பிளசிஸ் காயம்

டு பிளசிஸ் காயம்

ஆனால், சென்னை அணி இப்போது சந்திக்கவுள்ள மிக முக்கிய பிரச்சனை டு பிளசிஸ் காயம் தான். கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய டு பிளசிஸ் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் 64.00 ஆவரேஜுடன் 320 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 145.45. இதில், நான்கு அரைசதங்கள் அடங்கும். அப்படிப்பட்ட மிரட்டலான ஃபார்மில் இருக்கும் டு பிளசிஸ் காயம் சென்னை அணிக்கு நிச்சயம் சிக்கலே. அதேசமயம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது தோனி கரங்களை வலுப்படுத்தும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021 How Many Wins CSK Need Qualify Knockouts - சிஎஸ்கே
Story first published: Tuesday, September 14, 2021, 13:31 [IST]
Other articles published on Sep 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X