For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நட்புக்கு மரியாதை.. விராட் கோலி எடுத்த முயற்சிக்கு கைகொடுத்த சஹால்.. குவியும் பாராட்டு!

மும்பை: கொரோனாவுக்கு எதிராக விராட் கோலி எடுத்துள்ள பெரும் முயற்சிக்கு ஆர்சிபி வீரர் யுஸ்வேந்திர சஹால் கைகொடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

புண்படுத்துறாங்களே... ஆர்சிபி ரசிகர்களை மேலும் சூடாக்கிய இர்ஃபான்.. இப்படியா பேசுவது! புண்படுத்துறாங்களே... ஆர்சிபி ரசிகர்களை மேலும் சூடாக்கிய இர்ஃபான்.. இப்படியா பேசுவது!

இந்நிலையில் கொரோனா நிவாரணம் வழங்க விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இணைந்து செய்துள்ள திட்டம் பாராட்டை பெற்று வருகிறது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இணைந்து கொரோனா நிதியுதவி திரட்ட 'கெட்டோ' என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுபாடு சரி செய்யப்படவுள்ளது.

7 நாட்கள் தான்

7 நாட்கள் தான்

அதில் முதல் நபராக ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ள அவர்கள் 7 நாட்களுக்குள் ரூ.7 கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். அந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சஹால் உதவி

சஹால் உதவி

இந்நிலையில் ஆர்சிபி வீரரும், விராட் கோலி நெருங்கிய நபருமான யுஸ்வேந்திர சஹால் அந்த வலைதளத்தில் ரூ.95,000 நிதியுதவி செய்துள்ளார். இதன் மூலம் அந்த நிதியுதவி வலைதளத்தில் அதிக தொகை நன்கொடை செய்த டாப் 10 நபர்களில் சஹாலும் இணைந்துள்ளார். அந்த வலைதளத்தில் இதுவரை ரூ.4 கோடியே 55 லட்சம் சேர்ந்துள்ளது. இந்த பணமானது, நேரடியாக ஏசிடி கிராண்ட்ஸ் என்ற அமைப்புக்கு சென்று நாடு முழுவதும் ஆக்சிஜன் உதவிகளை ஏற்படுத்தவுள்ளது.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

ஹரியானவை சேர்ந்த யுஸ்வேந்திர சஹால் ஆர்சிபி அணிகாக கடந்த 2014ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கோலிக்கு மிகவும் பிடித்த நபராகவும் அந்த அணியில் விளங்கி வருகிறார். ஆனால் இந்த சீசனில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 7 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 8 விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

Story first published: Sunday, May 9, 2021, 15:46 [IST]
Other articles published on May 9, 2021
English summary
Yuzvendra Chahal’s Contribution for Virat Kohli-Anushka Sharma ketto relief fund
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X