For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மெகா அறிவிப்பு.. ரசிகர்களுக்கு குஷி ஏற்படுத்திய பிசிசிஐ.. இனி ஏலத்தில் எந்த பிரச்னையும் இல்லை

அமீரகம்: ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளுக்குமான விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022: Who is CVC Capital Partners? Know about Ahmedabad franchise's Owner | OneIndia Tamil

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 2 புதிய அணிகளும் இணைக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்குமான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2 புதிய ஐபிஎல் அணிகளின் ஏலம் நிறைவு.. திடீர் ட்விஸ்ட் கொடுக்கும் பிசிசிஐ.. வெற்றியாளர்கள் யார்? 2 புதிய ஐபிஎல் அணிகளின் ஏலம் நிறைவு.. திடீர் ட்விஸ்ட் கொடுக்கும் பிசிசிஐ.. வெற்றியாளர்கள் யார்?

 புதிய அணிகள்

புதிய அணிகள்

இதில் லக்னோ அணியை சஞ்சிவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குரூப் ரூ. 7090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் ரூ. 5600 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. புதிய அணிகளின் வருகையால் மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதில் 2 வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைக்கலாம். அப்படி இல்லையென்றால் 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்களை தக்கவைக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அணிகளுக்கான வசதி

புதிய அணிகளுக்கான வசதி

இதே போல புதிதாக வரவுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கும் புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்களுக்கு தேவையான 4 வீரர்களை தக்கவைத்த பின்பு, மீதமுள்ள வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அதாவது ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். இதில் 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற வடிவத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆட்ட முறைகள்

ஆட்ட முறைகள்

புதிய அணிகளின் வரவால், ஆட்ட முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது மொத்தமுள்ள 10 அணிகளையும் தலா 5 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 5 அணிகளும் தங்களுக்குள் 2 முறை மோதிக்கொள்வார்கள். இறுதியில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் செல்லும். இதனால் மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, October 28, 2021, 19:50 [IST]
Other articles published on Oct 28, 2021
English summary
IPL 2022 auction retention rules are out. Old teams can keep 4 players. new teams have special advantage
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X