For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அது நியாயமே கிடையாது” ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் வாய்ப்பு.. கேப்டன் தோனி கூறிய தரமான பதில்!

மும்பை: சென்னை அணியில் ஹங்கர்கேக்கருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என தோனி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் ப்ளே ஆஃப் சுற்றை எட்டியுள்ளன. லீக் சுற்றில் மீதம் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும்4 வெற்றிகளை மட்டுமே பெற்று வெளியேறிவிட்டது.

5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!5 வீரர்களின் இடம் உறுதி.. 4 துறைகளை செதுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடருக்கு கலக்கல் அணி ரெடி!

இளம் வீரர்களின் வாய்ப்பு

இளம் வீரர்களின் வாய்ப்பு

இந்தாண்டு தீபக் சஹார் இல்லாததால், அவரின் இடத்திற்கு தோனி பல வீரர்களுக்கு வாய்ப்புகளை தந்தார். பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த U 19 நட்சத்திரம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு மட்டும் வாய்ப்பே கடைசி வரை கிடைக்கவில்லை. 19வது ஆல்ரவுண்டரான ராஜ்வர்தன், U 19 உலகக்கோப்பையில் ஒரு ஆல்ரவுண்டராக பெரும் கவனத்தை ஈர்த்தவர்.

ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்

ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்

இவருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்பதுக் குறித்து பேசியிருந்த தலைமை பயிற்சியாளர், வலைப்பயிற்சியின் போது எங்களுக்கு திருப்திகரமாக உள்ள வீரர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறோம். அந்தவகையில் ராஜ்வர்தன் இன்னும் முழுமையாக தயாராகவில்லை எனக்கூறியிருந்தார். எனினும் சமீபத்தில் உலகக்கோப்பையில் கலக்கியவர் எப்படி தயாராக இல்லாமல் இருப்பார் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

தோனியின் விளக்கம்

தோனியின் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து தோனியே பேசியுள்ளார். அதில், ஹங்கர்கேகர் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றில் ஸ்பெஷலாக உள்ளார். ஆனாலும் அவர் இன்னும் முழுமையாக முன்னேற்றமடைய வேண்டும். நாங்கள் எங்கள் அணியின் இளம் வீரர்களை இன்னும் முன்னேற்றம் அடையச் செய்து வாய்ப்புகளை வழங்கினால் மட்டுமே அது நல்லதாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

சரி கிடையாது

சரி கிடையாது

ராஜ்வர்தன் தற்போது சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். சரியான பயிற்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் அனுபவம் குறைந்த வீரர்களை ஐபிஎல் தரத்தில் பந்து வீசவைப்பது சரியானது கிடையாது. எனவே அவருக்கு நல்ல பயிற்சியும் அனுபவம் கிடைக்க விரும்புகிறோம். அதன் காரணமாகவே அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

Story first published: Saturday, May 21, 2022, 19:38 [IST]
Other articles published on May 21, 2022
English summary
IPl 2022: CSK Captain dhoni Gives a explanation on why Rajvardhan Hangargekar not get a chance in Playing 11
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X