For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதிலும் சுரேஷ் ரெய்னா தான் ராஜா... பேட் கம்மின்ஸே வியக்கும் சாதனை பட்டியல்.. முழு விவரம்!!

மும்பை: எந்த வீரர், எப்படிபட்ட ஸ்கோரை அடித்தாலும், அங்கு நான் தான் ராஜா என்பது போன்று சுரேஷ் ரெய்னா இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை - கொல்கத்தா போட்டியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் அரங்கேறியது.

வெற்றிக்கு அருகில் சென்ற மும்பை அணியை, ஒரே ஓவரில் இழுத்து கீழே தள்ளியிருந்தார் பேட் கம்மின்ஸ்.

14 பந்துகளில் அரைசதம்... மும்பைக்கு ஒரே ஓவரில் முடிவு கட்டிய பேட் கம்மின்ஸ்.. கொல்கத்தா அபார வெற்றி!14 பந்துகளில் அரைசதம்... மும்பைக்கு ஒரே ஓவரில் முடிவு கட்டிய பேட் கம்மின்ஸ்.. கொல்கத்தா அபார வெற்றி!

மறக்க முடியாத வெற்றி

மறக்க முடியாத வெற்றி

162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, 101 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதனால் அந்த அணிக்கு கடைசி 37 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 16வது ஓவரில் பேட் கம்மின்ஸ் 6,4,6,6,N2, 4,6 என மொத்தமாக 35 ரன்களை பறக்கவிட்டார். 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனையடுத்து ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு ஸ்ட்ரைக் ரேட்டுடன் யாரேனும் அரைசதம் அடித்துள்ளனரா எனத்தேடி வருகின்றனர். அதனை இப்போது பார்க்கலாம்.

4. கே.எல்.ராகுல்

4. கே.எல்.ராகுல்

இந்த பட்டியலில் 4வது இடத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 16 பந்துகளில் 51 ரன்களை அடித்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் இவர் 318.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்யில் அரைசதம் அடித்திருந்தார்.

3. யூசுப் பதான்:

3. யூசுப் பதான்:

ஐபிஎல் தொடரின் அதிரடி நாயகனான யூசப் பதான், கடந்த 2014ம் ஆண்டு, கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 22 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இந்த போட்டியில் இவர் 327.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருந்தார்.

2. சுரேஷ் ரெய்னா:

2. சுரேஷ் ரெய்னா:

இந்த பட்டியலில் இத்தனை நாட்களாக முதல் இடத்தில் இருந்தவர், சுரேஷ் ரெய்னா. கடந்த 2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான பிளேஆஃப் போட்டியில் 25 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 87 ரன்களை விளாசினார். அப்போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் 348 ஆக இருந்ததை இன்றும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

பேட் கம்மின்ஸ்:

பேட் கம்மின்ஸ்:

இந்த பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 56 ரன்களை அடித்து வியக்கவைத்தார். இந்த போட்டியில் பேட் கம்மின்ஸின் ஸ்ட்ரைக் ரேட் 373.33 ஆகும். இதனை இனியும் யாரேனும் முறியடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, April 7, 2022, 18:53 [IST]
Other articles published on Apr 7, 2022
English summary
IPL 2022: List of Players who had fastest fifties with Highest strike rate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X