For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் பதவி ஏற்கும் சுரேஷ் ரெய்னா?.. முன்னணி அணியின் சூப்பர் திட்டம்.. இடையூறு கொடுக்கும் டெல்லி!

சென்னை: ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவை கேப்டன் பதவிக்கு நியமித்து, புதிய அணி ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுவிட்டனர்.

இதனையடுத்து ஒவ்வொரு அணியும் கழட்டிவிடப்பட்ட முக்கியமான வீரர்கள், எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக சுரேஷ் ரெய்னா தான்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் தேர்வாக ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்தது. இதன்பின்னர் கேப்டன் எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அந்த அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூப்ளசிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை. அதிலும் ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக ரெய்னா கழட்டிவிடப்பட்டுள்ளார்.

ரெய்னாவின் திட்டம்

ரெய்னாவின் திட்டம்

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அடுத்ததாக எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை நேரடியாக தேர்வு செய்துக்கொள்ளலாம். அதன்படி அகமதாபாத் அணி, சுரேஷ் ரெய்னாவை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு அணுகியுள்ளது.

Recommended Video

Ahmedabad அணியின் Captain-னாக Suresh Rainaவிடம் பேச்சுவார்த்தை | Oneindia Tamil
என்ன காரணம்

என்ன காரணம்

சுரேஷ் ரெய்னா ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் லையன்ஸ் என்ற அணிகாக கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரின் கேப்டன்சியில் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு தான் ரெய்னாவை அணியில் எடுக்க அகமதாபாத் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளது. மேலும் ரூ.14 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

ரெய்னா கூறுவது என்ன

ரெய்னா கூறுவது என்ன

ஆனால் சுரேஷ் ரெய்னா இதனை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பேசியிருந்த ரெய்னா, சிஎஸ்கேவுக்கு பிறகு நான் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகாக தான் விளையாட விரும்புகிறேன். அதுதான் எனது ஆசை எனக்கூறியிருந்தார். டெல்லி அணி, தங்களது சீனியர் வீரர்களான ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்களை கழட்டிவிட்டுள்ளது. எனவே அவர்களின் இடத்திற்கு ரெய்னாவை எடுக்க முற்படும் எனத்தெரிகிறது.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

இது ஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சுரேஷ் ரெய்னாவுக்கு குறி வைக்கலாம். அந்த அணிகாக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை தேடி கொடுத்தவர் ரெய்னா. தோனிக்கு பிறகு கேப்டனாவதற்கான தகுதிகள் உள்ளன என்றெல்லாம் கூறப்பட்டது. அவர் எப்படியும் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையில் மீண்டும் சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கலாம்.

Story first published: Monday, December 6, 2021, 12:18 [IST]
Other articles published on Dec 6, 2021
English summary
New IPL franchis approach Suresh raina for a Captain Position ahead of IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X