இவரை ஞாபகம் இருக்கிறதா??.. ஆர்சிபி ரசிகையை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன நடந்தது??

அகமதாபாத்: ஆர்சிபி அணியின் தோல்வி காரணமாக ரசிகை ஒருவரின் திருமணம் பிரச்சினையில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Recommended Video

IPL 2022: RCB-யின் Loss-க்கு என்ன Reasons? | Aanee's Appeal | RCB vs RR Qualifier 2| #Cricket

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் சுற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி தோல்வியடைந்து வெளியேறியது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 159 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, அதனை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லாமல் வெளியேறியுள்ளது.

யாருமே தொட முடியாத கோலி சாதனை.. அசால்ட்டாக சமன் செய்த பட்லர்.. முறியடிக்க செம வாய்ப்புயாருமே தொட முடியாத கோலி சாதனை.. அசால்ட்டாக சமன் செய்த பட்லர்.. முறியடிக்க செம வாய்ப்பு

ஆர்சிபி தோல்வி

ஆர்சிபி தோல்வி

கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வரும் ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏகபோகத்திற்கு இருந்த போதும், ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை டூப்ளசிஸ் தலைமையில் கோப்பை வெல்லும் என பல ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்தனர். இதற்காக பல வேடிக்கை சம்பவங்களையும் செய்திருந்தனர்.

ரசிகையின் கருத்து

ரசிகையின் கருத்து

இந்நிலையில் அதில் ஒரு ரசிகை செய்த விஷயம் தான் தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது. ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் கடந்த மாதம் மோதிய போது, ரசிகை ஒருவர் வித்தியாசமான பதாகையை ஏந்தியிருந்தார். அதில் "ஆர்சிபி கோப்பை வெல்லும் வரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை" என குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் அப்போது இணையத்தில் ட்ரெண்டானது.

மீண்டும் ட்ரெண்ட்

மீண்டும் ட்ரெண்ட்

ஆனால் தற்போது ஆர்சிபி தோற்றவுடன் மீண்டும் அந்த பெண்ணின் புகைப்படத்தை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். அதில் "திருமணத்திற்காக அந்த பெண் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, பாவம்" என கிண்டலடித்துள்ளனர்.

டூப்ளசிஸின் விளக்கம்

டூப்ளசிஸின் விளக்கம்

தோல்வி குறித்து பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ், 30 ரன்கள் குறைவாக அடித்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 3 ஆண்டுக்கான அணி சிறப்பாக தயாராகியுள்ளது. இனி வரும் வருடங்களில் ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார்களாக திகழ்வார்கள். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, அடுத்தாண்டு சிறப்பான கம்பேக் தருகிறோம் எனக் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: RCB Fan girl's marriage in trouble after the team again failure to clinch the trophy
Story first published: Saturday, May 28, 2022, 15:35 [IST]
Other articles published on May 28, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X