போராட்டம் நடத்திய சஞ்சு சாம்சன்.. புதுவிதமாக அம்பயரிங் சர்ச்சை.. ஐபிஎல் வரலாற்றில் அரிய நிகழ்வு!

மும்பை: நடுவரின் தவறான முடிவால் களத்திலேயே சஞ்சு சாம்சன் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

IPL 2022: Umpire-ன் Wide Callக்கு Sanju Samson கொடுத்த DRS Signal! | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 152/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 158 /3 ரன்களை எடுத்தது.

 அம்பயரிங் பிரச்சினை

அம்பயரிங் பிரச்சினை

மும்பை: நடுவரின் தவறான முடிவால் களத்திலேயே சஞ்சு சாம்சன் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 152/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 158 /3 ரன்களை எடுத்தது.

கடைசி 2 ஓவர் பரபரப்பு

கடைசி 2 ஓவர் பரபரப்பு

கொல்கத்தா வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய 3வது பந்து வைடாக சென்றது. இதற்கு மாற்றாக போடப்பட்ட பந்தில் பவுண்டரி சென்றதால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கடுப்பில் இருந்தார். இதன் பின்னர் 4வது பந்தையும் பிரஷித் கிருஷ்ணா அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பாக வீச, அதனை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடிப்பதற்காக வைட் லைன் வரை சென்றுவிட்டார். எனினும் அம்பயர் அதற்கு வைட் என்று தான் சிக்னல் காட்டினார்.

சஞ்சு சாம்சன் போராட்டம்

சஞ்சு சாம்சன் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், அம்பயரின் முடிவை எடுத்து DRS கேட்டார். வைட் எனக்கூறப்பட்ட பந்துக்கு 3வது நடுவரின் முடிவு கேட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. கடுப்பில் அவர் போராட்டமே நடத்துவது போன்று தான் இருந்தது. எனினும் கள அம்பயரின் வைட் முடிவுகளை, DRS மூலம் பெரிதும் மாற்ற முடியாது என்பதால் வைடாகவே கருதப்பட்டது.

 கடைசி பந்து

கடைசி பந்து

இந்த பிரச்சினை இதோ முடியவில்லை. அதே ஓவரின் கடைசி பந்தையும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பாக வீச, நிதிஷ் ராணா ஏறி சென்று அடிக்கப்பார்த்தார். எனினும் அதற்கும் நடுவர் வைட் என்றே கொடுக்க, அதிருப்தியில் சஞ்சு சாம்சன், நேரடியாக அம்பயரிடம் சென்று, " உங்களுக்கு என்னதான் பிரச்சினை என்பது போன்று சில விநாடிகள் பேசி வந்தார்" இந்த ஒரு ஓவரில் அம்பயரின் முடிவு சரியாக இருந்திருந்தால் வெற்றியாளரே மாறியிருப்பார்கள் என்பதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022: Sanju samson starts protest against umpire’s wide call with DRS signal in KKR vs RR match
Story first published: Tuesday, May 3, 2022, 10:41 [IST]
Other articles published on May 3, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X