For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி vs டூப்ளசிஸ்.. ஆர்சிபி தற்போது மட்டும் ஜொலிப்பது எப்படி?.. சேவாக் கூறிய முக்கிய தகவல்!!

மும்பை: விராட் கோலி செய்த முக்கிய தவறை டூப்ளசிஸ் செய்யாமல் இருப்பது தான் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல காரணமாக இருந்துள்ளதாக விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

மிகப்பெரும் பரபரப்புக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஆர்சிபி, இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் கேப்டன்சி தான்.

“அது நடக்கவில்லை என்றால் ஓய்வு பெறுவேன்”.. விராட் கோலியின் தடாலடி முடிவு.. விமர்சனங்களுக்கு பதிலடி! “அது நடக்கவில்லை என்றால் ஓய்வு பெறுவேன்”.. விராட் கோலியின் தடாலடி முடிவு.. விமர்சனங்களுக்கு பதிலடி!

ஆர்சிபியின் கோப்பை கனவு

ஆர்சிபியின் கோப்பை கனவு

கடந்த 2008ம் ஆண்டு முதலே ஐபிஎல்-ல் இருக்கும் ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான் வழிநடத்தியும் சொதப்பல் தான் மிஞ்சியது. கடந்த 2013ம் ஆண்டு முதல் விராட் கோலி கடுமையாக போராடி ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி நாயகர்கள் உதவிய போதும், எதுவும் நடக்கவில்லை.

டூப்ளசிஸின் கேப்டன்சி

டூப்ளசிஸின் கேப்டன்சி

ஆனால் இந்த முறை டூப்ளசிஸின் கேப்டன்சியில் ஆர்சிபி அசால்டாக வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் துறை சம பலத்துடன் செயல்பட்டு வருகிறது. இதே போல ஃபீல்டிங்கும் இந்த முறை தரமான ஒன்றாக உள்ளது. விராட் கோலி செய்ததையே தானே டூப்ளசிஸ் செய்கிறார். ஆனால் தற்போது மட்டும் ஆர்சிபி எப்படி சாதிக்கிறது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 சேவாக் பதில்

சேவாக் பதில்

இந்நிலையில் இதற்கு விரேந்தர் சேவாக் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதிய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மற்றும் புது கேப்டன் டூப்பிளஸிஸ் கூட்டணி, ஆர்சிபி அணியின் பழைய திட்டங்களை மொத்தமாக மாற்றியுள்ளனர். ஒரு வீரர் 2-3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட தவறினால், அவரை உடனடியாக ப்ளேயிங் 11ல் இருந்து விராட் கோலி நீக்கிவிடுவார். இதனால் ஆர்சிபியின் ப்ளேயிங் 11ல் எப்போதுமே ஒரு நிலையான தன்மை இருந்ததில்லை. ஆனால் டூப்ளசிஸ் நிலையான ப்ளேயிங் 11ஐ அணியை செயல்படுத்தி வருகிறார்.

அதிர்ஷ்டமும் தேவை

அதிர்ஷ்டமும் தேவை

இதே போல அதிர்ஷ்டமும் ஓரளவிற்கு கைக்கொடுத்து வருகிறது. கடந்த காலங்களில் 200+ ரன்கள் குவித்தால் துரதிஷ்டவசமாக தோற்றுவிடும். ஆனால் இந்த முறையோ, பிளே ஆஃப் செல்ல டெல்லியை, மும்பை அணி தோற்கடித்து உதவியது. பல வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர், விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டார். இது ஆர்சிபிக்கு பெரும் பலமாக அமைந்துவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 25, 2022, 18:44 [IST]
Other articles published on May 25, 2022
English summary
Sehwag on Virat kohli captaincy ( விராட் கோலி கேப்டன்சி குறித்து சேவாக் பேச்சு ) ஐபிஎல் 2022 தொடரில் ஆர்சிபி அணி ஜொலிப்பதற்கு பின்னால் உள்ள காரணத்தை விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X