இரண்டு நாட்களாக நடந்த கிரிக்கெட் கொண்டாட்டம்... 2018 ஐபிஎல் ஏலம் முடிவிற்கு வந்தது!

Posted By:

பெங்களூர்: பெங்களூரில் நேற்று காலையில் இருந்து ஐபிஎல் ஏலம் நடைபெற்று வந்தது. இது 11வது ஐபிஎல் சீசனுக்காக நடத்தப்பட்ட ஏலம் ஆகும்.

பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனைத்து வீரர்களும் முதலில் இருந்து ஏலம் விடப்பட்டார்கள். சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு வந்து இருக்கிறது.

578 வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அணிகளும் பட்ஜெட், சில விதிமுறைகள் என பல விஷயங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட்

பட்ஜெட்

இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் பட்ஜெட் உயர்த்தப்பட்டது. அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டது. இதில் சென்னை அணி மட்டும் அதிகபட்சமாக 6 கோடி வரை மிச்சம் வைத்து இருக்கிறது.

வீரர்கள்

வீரர்கள்

இந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள 1122 வீரர்கள் விண்ணப்பம் கொடுத்து இருந்தார்கள் இதில். மொத்தம் 578 வீரர்கள் கடைசி பட்டியலுக்கு சென்றார்கள். இந்த பட்டியலில் மொத்தம் 169 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விவரம்

விவரம்

இதில் மொத்தமாக கலந்து கொண்ட வீரர்களில் 169 ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 113 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 56 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். 91 இந்திய அணிக்காக விளையாடுவார்கள். 78 பேர் அணியில் இடம்பிடிக்காத புதிய வீரர்கள்.

எவ்வளவு

எவ்வளவு

இதில் மொத்தமாக 640 கோடி பணம் ஒதுக்கப்பட்டது. அதில் சென்னை அணி அதிகமாக 6 கோடி பயன்படுத்தவில்லை. மொத்தமாக 431.7கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL auction 2018 was held in Bengaluru yesterday and today. IPL auction 2018 comes to end. In this 169 Players bought. 431.70 Crores Total money spent.
Story first published: Sunday, January 28, 2018, 17:08 [IST]
Other articles published on Jan 28, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற