For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்- கேகேஆரின் பலமான சுழற்பந்துவீச்சு.. எதிர்கொள்ள சிஎஸ்கே தயார்.. மெகா பிளான் ரெடி

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டி மாலை 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில் கடைசியாக கொல்கத்தா விளையாடிய 11 போட்டியில் 10 போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது.

 சிஎஸ்கே vs கொல்கத்தா போட்டி.. அறிமுகமாகும் 5 இளம் வீரர்கள்.. முதல் போட்டியிலேயே அதீத சுவாரஸ்யம்!! சிஎஸ்கே vs கொல்கத்தா போட்டி.. அறிமுகமாகும் 5 இளம் வீரர்கள்.. முதல் போட்டியிலேயே அதீத சுவாரஸ்யம்!!

சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 போட்டியிலும் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.

மிடில் ஓவர்

மிடில் ஓவர்

இந்த நிலையில், சிஎஸ்கே அணியை வீழ்த்த சுழற்பந்துவீச்சு என்ற ஆயுதத்தை கொல்கத்தா அணி எடுக்க உள்ளது. சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி என டாப் கிளாஸ் சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்த 2 பந்துவீச்சாளர்களும் சிஎஸ்கே அணிக்கு கடந்த காலங்களில் பல்வேறு தலைவலியை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விருவரையும் வைத்து மிடில் ஓவர்களை வீச ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு எடுத்துள்ளார்.

கவுண்டர் அட்டாக்கவுண்டர் அட்டாக்

கவுண்டர் அட்டாக்கவுண்டர் அட்டாக்

இந்த பிளானை எதிர்கொள்ள சிஎஸ்கேவும் கவுண்டர் அட்டாக் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. மொயின் அலி இன்றைய போட்டியில் இல்லை. இதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வேவை மூன்றாவது வீரராக களமிறக்கி, ராபின் உத்தப்பாவை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று சிஎஸ்கே திட்டம் போட்டுள்ளது.

டிவோன் கான்வே

டிவோன் கான்வே

அதற்கு காரணம், டிவோன் கான்வே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் வல்லவர். கான்வே சுழற்பந்துவீச்சை லாவமாக ஆடுவார் என்பதாலேயே தோனி ஏலத்தில் இவரை தேர்ந்து எடுக்க வைத்தார். இதனால் கான்வே மிடில் ஆர்டரில் விளையாடினால், சுனில் நரைனையும், வருண் சக்ரவர்த்தியையும் நன்றாக எதிர்கொள்வார் என்பதால் சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளது.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil
ஆடுகளம்

ஆடுகளம்

சிஎஸ்கே அணியின் இந்த திட்டம் எந்த அளவுக்கு கைக் கொடுக்கும் என்று இன்று தெரிந்துவிடும். வான்கடே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. பந்தும் நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க நல்ல வாய்ப்பை ஏற்படும். 2 புதிய கேப்டன்கள் களமிறங்குவதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, March 26, 2022, 17:21 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL – KKR Plans to attack CSK- CSK counter attack with brilliant plan ஐபிஎல்- கேகேஆரின் பலமான சுழற்பந்துவீச்சு.. எதிர்கொள்ள சிஎஸ்கே தயார்.. மெகா பிளான் ரெடி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X