அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா செய்யும் பணிகள் உலகில் வெகு சில வீரர்களால் மட்டுமே செய்ய முடிந்தவை என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் புகழ்ந்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்தை வெறும் கைகளுடன் திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த தொடரில் இந்தியாவின் வெற்றியை தாண்டி சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் காட்டிய ஃபார்ம் தான் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவும் தனது ஃபார்முக்கு முழுவதுமாக வந்துள்ளார்.

பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக் பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்

பாண்ட்யாவின் ஆட்டம்

பாண்ட்யாவின் ஆட்டம்

முதல் ஒருநாள் போட்டியில் சற்று மோசமாக பந்துவீசிய அவர் 70 ரன்களை வாரி வழங்கினார். பேட்டிங்கிலும் 38 பந்துகளை சந்தித்து 28 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் 2வது போட்டியில் 2/16 மற்றும் 3வது போட்டியில் 1/37 என சிறப்பான கம்பேக்கை கொடுத்தார். அதுவும் 3வது போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசி, விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். பேட்டிங்கில் 38 பந்துகளில் 54 ரன்களை அடித்து இலக்கை அதிகரித்தார்.

இர்ஃபான் பதான் பாராட்டு

இர்ஃபான் பதான் பாராட்டு

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா குறித்து இர்ஃபான் பதான் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா மிகவும் முக்கிய வீரர் ஆவார். அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையுமே செய்வது மட்டுமல்ல, சரியான பேலன்ஸை கொடுக்கிறார். இந்திய அணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பை போன்று வேறு ஒரு வீரரை கண்டுபிடிப்பது அறிதாகும். உலகிலேயே வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.

டென்னிஸ் ஷாட்கள்

டென்னிஸ் ஷாட்கள்

அவரின் ஷாட்களே அவரின் தரத்தை காட்டிவிடும். குறிப்பாக ஸ்ட்ரெயிட் திசையில் புல் ஷாட் ஆடுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் கிரிக்கெட் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி கொண்டுள்ளார். பந்து சற்று பழையது ஆனதும் மற்ற பேட்டர்கள் திணறினார்கள். ஆனால் அவர் மட்டும் அசால்ட்டாக ஆடினார். எனவே அவர் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம்.

கேப்டன் பொறுப்பு

கேப்டன் பொறுப்பு

ஹர்திக் பாண்ட்யா தற்போது ஒரு ஆல்ரவுண்டராக மட்டுமின்றி கேப்டன் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கை அணியுடனான டி20 தொடரை வென்றுக்கொடுத்த அவர், அடுத்ததாக நியூசிலாந்துடனான டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Indian cricketer Irfan pathan hails Hardik pandya after his showcase performance in India vs New Zealand ODI series
Story first published: Wednesday, January 25, 2023, 19:09 [IST]
Other articles published on Jan 25, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X