For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்

டெல்லி : ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Ganguly Changed Indian Cricket Part 3 | Ganguly made Dravid as Wicket-keeper

முன்னாள் வீரர் முகமது கையிப் தன்னுடைய முதல் வாழ்த்தை துவக்கி வைக்க, தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து மழையில் ஹர்பஜனை நனையவிட்டனர்.

இந்நிலையில், பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிய யுவராஜ் சிங், இது ஹர்பஜனின் 40ஆ அல்லது 47வது பிறந்தநாளா என்று கலாய்த்துவிட்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் தனக்கு பிறந்தநாள் ட்ரீட் தரும்படியும் கேட்டுள்ளார்.

ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்!ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்!

40வது பிறந்த நாள் கொண்டாட்டம்

40வது பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்திய ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட சக வீரர்கள் வாழ்த்துமழையை பொழிந்தனர். முதலில் பிறந்தநாள் வாழ்த்தை முன்னாள் வீரர் முகமது கையிப் துவக்கி வைக்க தொடர்ந்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

யுவராஜ் சிங் வித்தியாச வாழ்த்து

இன்ஸ்டாகிராமில் தாங்கள் இருவரும் இணைந்துள்ள வீடியோவை வெளியிட்ட முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ஹர்பஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிற்காமல், அவருடைய 40ஆ அல்லது 47வது பிறந்தநாளா என்றும் கலாய்த்துள்ளார். மேலும் அவர் எப்போதுமே கிங் போன்றவர் என்று தெரிவித்த யுவராஜ் சிங், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பார்ட்டி தரவும் கோரியுள்ளார்.

மிகச்சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்து

இதேபோல தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் அவரின் சிறந்த உடல்நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் வரும் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்றும் விராட் கோலி வாழ்த்தியுள்ளார்.

சக வீரர்கள் வாழ்த்து

சக வீரர்கள் வாழ்த்து

பிசிசிஐ தனது வாழ்த்துக்கைளை டிவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளது. மேலும் பார்த்திவ் படேல், ஸ்ரீசாந்த், ஷிகர்தவான் உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2001ல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் சிங் நிகழ்த்தியுள்ளார். இதேபோல 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் இவர்வசம் உள்ளது.

Story first published: Friday, July 3, 2020, 19:57 [IST]
Other articles published on Jul 3, 2020
English summary
Yuvraj Singh's hilarious wish for Harbhajan took the cake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X