For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராகுல் காந்தி ஓப்பனிங் வீரர்??.. டி20 உலகக்கோப்பை குறித்த ரோகித்-ன் பேச்சு.. இணையத்தில் சிரிப்பலை!

மும்பை: இந்திய அணிக்காக ராகுல் காந்தி ஓப்பனிங் களமிறங்கவுள்ளதாக வெளியான தகவலால் இணையத்தில் சிரிப்பலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிக கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான தொடர் என்பதால் இந்த மோதல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SA T20 - தென்னாப்பிரிக்காவில் மிரட்டலான அணியை உருவாக்கிய சூப்பர் கிங்ஸ்.. அதிரடி வீரர்கள் தேர்வுSA T20 - தென்னாப்பிரிக்காவில் மிரட்டலான அணியை உருவாக்கிய சூப்பர் கிங்ஸ்.. அதிரடி வீரர்கள் தேர்வு

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

இந்த டி20 போட்டிகள் குறித்த செய்திகளை உடனடியாக வழங்குவதற்காக செய்தி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்தவகையில் இந்தி ஊடகம் ஒன்று, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஓப்பனிங் விளையாடுவார் என்று செய்தி வெளியிட்டதால் ரசிகர்களுக்கு திடீர் குழப்பம் ஏற்பட்டது.

ரோகித்தின் பேச்சு

ரோகித்தின் பேச்சு

ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசுவதற்காக சமீபத்தில் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் தான் ஓப்பனராக செயல்படுவார் எனக்கூறினார். மேலும் விராட் கோலி சில சமயங்களில் ஓப்பனிங் விளையாட வாய்ப்புள்ளது எனக்கூறினார்.

வீடியோ

வீடியோ

இந்த தகவலை வேகமாக மக்களுக்கு தெரியப்படுத்த நினைத்த அந்த செய்தி ஊடகம், நேரலையிலேயே தவறுதலாக ராகுல் காந்தி ஓப்பனிங் வீரர் எனக்கூறினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் திட்டம்

இந்தியாவின் திட்டம்

இதுஒருபுறம் இருக்க, இந்திய அணி இன்று முதல் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் களமிறங்குகிறது. ஆசிய கோப்பையில் பேட்டிங் சரியாக அமைந்த போதிலும் பந்துவீச்சு சற்று மோசமாக அமைந்தது. எனவே இந்த முறை பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் வந்துள்ளதால், புதிய மாற்றத்தை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, September 20, 2022, 18:17 [IST]
Other articles published on Sep 20, 2022
English summary
Cricket Fans trolling Journalist for huge blunder on live TV, afte he said Rahul Gandhi open for India at T20 World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X