For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்ச் தானா இல்லை தார் ரோடா.. F1 பந்தயமே நடத்தலாம் போல.. ஒரே நாளில் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு தயாரிக்கப்பட்டுள்ள பிட்ச் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் நாட்டிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும்,, பின்னர் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களில் 4 பேர் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்... பும்ரா பிளேயிங் லெவனில் இல்லை..ரோகித் எடுத்த முடிவு.. IND v SAஇந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்... பும்ரா பிளேயிங் லெவனில் இல்லை..ரோகித் எடுத்த முடிவு.. IND v SA

4 பேர் சதம்

4 பேர் சதம்

மொத்தம் வீசப்பட்ட 75 ஓவர்களில் அதாவது 450 பந்துகளில் இங்கிலாந்து அணி 506 ரன்கள் விளாசியுள்ளது. அந்த அணியின் சராசரி ரன்ரேட் 6.75ஆக உள்ளது. ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே 14 ரன்கள் விளாசி பேஸ் எஃபெட் என்றால் என்ன என்பதை இங்கிலாந்து வீரர்கள் காட்ட தொடங்கினர். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்காக 6 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பென் டெக்கட், முதல் போட்டியிலேயே சதம் விளாசியுள்ளார்.

பாபர் அசாமிற்கு அதிர்ச்சி

பாபர் அசாமிற்கு அதிர்ச்சி

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், டாஸ் போடப்பட்ட போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், பிட்ச் முதல் ஒன்றரை நாட்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கு அப்படி மாறாக, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் மட்டுமே 6 ரன்களுக்கு கீழ் எகானமியை வைத்துள்ளார்.

ஸ்ட்ரைக் ரேட்

ஸ்ட்ரைக் ரேட்

அதுமட்டுமல்லாமல் இன்று பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்களில் 4 பேரின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் என்பது இன்னொரு அதிர்ச்சி. அதாவது இந்திய வீரர் கேஎல் ராகுல் டி20 கிரிக்கெட்டையே 120 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடுவார். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 110 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது பிட்ச் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

F1 பந்தயம்

F1 பந்தயம்

அண்மை காலமாக பாகிஸ்தான் மைதானங்கள் அதிகளவில் பிளாட் பிட்ச்சாக உருவாக்கப்பட்டு வருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்பதால் பிசிபி நிர்வாகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று சிறு மரியாதையை கூட அளிக்காமல் பிட்ச்சை தயார் செய்வதே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது. இன்று இங்கிலாந்து அணி விளையாடிய பிட்ச் போல், சில கி.மீ. தூரம் அமைத்து சில வளைவுகளை அமைத்தால், F1 பந்தயத்தையே நடத்தலாம் என்பதே ரசிகர்களின் பேச்சாக உள்ளது.

டாம் மூடி கிண்டல்

டாம் மூடி கிண்டல்

இதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளதாக கிண்டலாக ட்வீட் செய்ய, பிட்ச் தயாரிப்பில் ஐசிசி தலையிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளிலாவது பாகிஸ்தான் நிர்வாகம், நல்ல பிட்ச்சை அமைக்க முன்வர வேண்டும்.

Story first published: Thursday, December 1, 2022, 19:48 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
Fans are criticizing the pitch prepared for the Pakistan-England Test match. Because England Scores 506 runs in 75 Overs in the First day of Test Cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X