For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2019 தொடரின் பெஸ்ட் ஆல் ரவுண்டர்கள்..! இவங்க 3 பேரை தவிர யார் இருக்க முடியும்?

மும்பை:ஐபிஎல் தொடர் 2019ல் 3 முக்கிய ஆல் ரவுண்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அந்த 3 பேரின் பங்களிப்பை ஐபிஎல் ரசிகர்கள் என்றுமே மறக்க முடியாது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆல் ரவுண்டர்களின் பங்களிப்பு. பிரவோ, ரசல், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோர் நட்சத்திர ஆல் ரவுண்டர்களாக இருந்திருக்கின்றனர்.

ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் மிகவும் வலிமையான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் சிறந்த பேட்டிங் இருந்தாலும், சிறப்பான ஆல் ரவுண்டர்கள் இல்லாததால் அடுத்த கட்டத்துக்கு அந்த அணிகள் நகரவில்லை.

ஐபிஎல் உலகம் மறந்த அந்த 3 முக்கிய வீரர்கள்.. போதிய வாய்ப்பின்றி ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம்ஐபிஎல் உலகம் மறந்த அந்த 3 முக்கிய வீரர்கள்.. போதிய வாய்ப்பின்றி ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம்

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்

ஆனால் முக்கியமான 3 ஆல் ரவுண்டர்கள் அணியை பல தருணங்களில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். சென்னை அணியில் ஜடேஜா, கொல்கத்தாவின் ரசல், மும்பையின் ஹர்திக் பாண்டியா ஆகியோரை அதில் சொல்லலாம்.

ஜடேஜாவின் பங்கு

ஜடேஜாவின் பங்கு

ஜடேஜா சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தாமல் இருந்தாலும், அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான சூழ்நிலையில் ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா இணைந்து எதிரணியினை குறைந்த இலக்கில் வீழ்த்தி உள்ளனர். சென்னை அணியின் சார்பாக இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை ரவீந்திர வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா சிறப்பான பேட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அளித்திருக்கிறார். பந்துவீச்சில் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோருக்கு ஹர்திக் பாண்டியா ஆதரவாக நின்றிருக்கிறார். ஹர்திக் பாண்டியா 16 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதிரடி ரசல்

அதிரடி ரசல்

அவ்வளவு எளிதில் யாரும் மறக்கமுடியாத ஒரு வீரர் இவர். ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பு என்று சொல்லலாம். ரசல் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பவுலிங் அவருக்கு கை கொடுக்கவில்லை. 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 510 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இவ்வருட ஐபிஎல் தொடரின் சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரருக்கான விருதினை தட்டிச் சென்றார்.

Story first published: Tuesday, May 14, 2019, 13:58 [IST]
Other articles published on May 14, 2019
English summary
Jadeja, russell and hardik panya are the 3 best all rounders in ipl 2019 season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X