For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தின் "நம்பர்.1".. ஜேம்ஸ் ஆண்டர்சன் மாபெரும் சாதனை - சச்சினை நெருங்க முடியுமா?

எட்ஜ்பாஸ்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போதே, ஒரு மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக களமிறங்கியிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையே லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று (ஜூன்.10) தொடங்கியது.

 ஒரே பவுலர்.. 7 முறை அதே ஒரே பவுலர்.. 7 முறை அதே

காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், டாம் லாதம் கேப்டனாக செயல்படுகிறார். அதேசமயம், அந்த அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வில் யங், டாம் பிளன்டல், டேரில் மிட்சல், அஜஸ் படேல், மேட் ஹென்றி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

 50+ பார்ட்னர்ஷிப்

50+ பார்ட்னர்ஷிப்

இந்த நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளே களமிறங்கினர். 29 ஓவர்கள் வரை, அதாவது உணவு இடைவேளை வரை நியூசிலாந்து பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. ரோரி பர்ன்ஸ் 96 பந்துகளில் 32 ரன்களும், டோமினிக் சிப்ளே 79 பந்துகளில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை வரை அந்த அணி 67 ரன்கள் எடுத்திருந்தது.

 4 தலைகள் காலி

4 தலைகள் காலி

ஆனால்,உணவு இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. சிப்ளே 35 ரன்களிலும், சாக் கிராலே ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும் வெளியேறினர். இதில், சிப்ளே மற்றும் ஜோ ரூட் ஆகியோரை மேட் ஹென்றி வெளியேற்றினார். அதே ஓலே போப் 19 ரன்களில், இந்திய வம்சாவளி பவுலர் அஜஸ் படேல் ஓவரில் அவுட்டானார். தற்போது அந்த அணி 129 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

 அதிக டெஸ்ட் மேட்ச்

அதிக டெஸ்ட் மேட்ச்

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் எனும் மகத்தான பெயரை பெற்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக், கடந்த சீசனில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய பின்னர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்திருந்த அலஸ்டைர் குக், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் (161) போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

 162வது மேட்ச்

162வது மேட்ச்

இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போது, வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனையை தகர்த்துள்ளார். இது அவரது 162வது டெஸ்ட் போட்டியாகும். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், ஜாக் காலிஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 162

அலஸ்டியர் குக் - 161

ஸ்டூவர்ட் பிராட் - 148

அலெக் ஸ்டிவர்ட் - 133

ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Story first published: Thursday, June 10, 2021, 21:00 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
James Anderson Most-Capped Test Cricketer - ஜேம்ஸ் ஆண்டர்சன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X