For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கேப்டனாக நான் மிகவும் கஷ்டப்பட்ட அணித் தேர்வு இதுதான் - ஜோ ரூட்

By Aravinthan R

நாட்டிங்ஹம் : மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 18) நாட்டிங்ஹம் நகரில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து. அதில், சாம் கர்ரன் நீக்கப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அணியில், இந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

Joe Root says leaving Sam Curran for ben Stokes is the difficult decision as a captain.


இது பற்றி பேசிய ஜோ ரூட், “ஒரு கேப்டனாக நான் மிகவும் கடினப்பட்டு எடுத்த அணித் தேர்வு இதுதான். சாம் வாய்ப்பை இழந்தார். பென் அணியில் வந்திருக்கிறார். இதில் கடினமான விஷயம் என்னவென்றால், எல்லோருமே நன்றாக செயல்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை. அவர் வழக்கு விசாரணைக்கு சென்ற காரணத்தால், அவருக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். வழக்கில் இருந்து விடுபட்ட ஸ்டோக்ஸ்-க்கு களத்தில் இறங்கும் அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், அணியில் அவரது இடம் உறுதியாகியுள்ளது.

அதே சமயம், சாம் கர்ரன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிக அனுபவமற்ற இளம் வீரரான சாம் கர்ரன், இந்த தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக ஆடினார். கிட்டத்தட்ட இங்கிலாந்து அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார்.

இரண்டாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸ்-க்கு பதில் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் சதமடித்து தன்னை நிரூபித்தார். அந்த போட்டியில் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனையடுத்து, மூன்றாவது போட்டிக்கு யாரை எடுப்பது, யாரை விடுவது என்ற குழப்பம் நீடித்தது.

முடிவாக, புதிய வீரரான சாம் கர்ரன் வெளியேற்றப்பட்டு, அனுபவ பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். அணியில், வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.






Story first published: Saturday, August 18, 2018, 11:56 [IST]
Other articles published on Aug 18, 2018
English summary
Joe Root says leaving Sam Curran for ben Stokes is the difficult decision as a captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X