For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினுக்கு கிடைத்தது, காம்ப்ளிக்கு கிடைக்காததால் தோல்வி அடைந்தார்: கபில் தேவ்

By Siva

டெல்லி: சச்சின் டெண்டுல்கரை போன்று வினோத் காம்ப்ளிக்கு நல்ல நண்பர்கள், குடும்பம் அமையாததால் அவர் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி ஆகியோரின் திறமையை ஒப்பிட்டு கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சச்சின்

சச்சின்

சச்சின் மற்றும் காம்ப்ளி இருவருமே ஒரே நேரத்தில் தங்களின் கிரிக்கெட் பயணத்தை துவங்கினர். இருவருமே திறமைசாலிகள். குறிப்பாக சொல்லப் போனால் சச்சினை விட காம்ப்ளி திறமைானவர்.

காம்ப்ளி

காம்ப்ளி

சச்சினுக்கு அமைந்தது போன்று குடும்ப சூழல், நட்பு வட்டாரம், ஆதரவு காம்ப்ளிக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் காம்ப்ளி தோல்வி அடைந்தார். நல்ல நண்பர்கள், குடும்பம் அமைந்த சச்சின் 24 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடினார்.

திறமை

திறமை

திறமை தேவை தான். ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு அதை விட பல விஷயங்கள் தேவைப்படுகிறது. அதாவது நல்ல நண்பர்களின் ஆதரவு, பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், பள்ளி, கல்லூரி ஆகியவை தேவைப்படுகிறது.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை மைதானம் வரை அழைத்து வருவது தான் பெற்றோரின் கடமை. குழந்தைகள் என்ன செய்ய வேண்டும், என்ன கற்க வேண்டும் என்பதை அவர்களிடத்தில் விட்டுவிட வேண்டும்.

1983

1983

1983ம் ஆண்டு பிசிசிஐக்கு பெரிய வருவாய் இல்லை. நாங்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகே பிசிசிஐ பெரிய பணக்கார அமைப்பாக மாறியது. நாங்கள் அடைந்த வெற்றியின் பலனை தற்போதைய வீரர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

Story first published: Monday, May 9, 2016, 15:39 [IST]
Other articles published on May 9, 2016
English summary
Former cricketer Kapil Dev said that Vinod Kambli was more talented than Sachin Tendulkar. He even pointed out the reason for Kambli's failure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X