For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 ஆண்டு சாதனையை முறியடிச்சீங்க... ஆனா 34 ஆண்டுகால சாதனையை கோட்டை விட்டீங்களே..?

லண்டன்: 12 ஆண்டுகளாக முடிக்க முடியாமல் இருந்த ஜெயவர்த்தனா சாதனையை, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் வில்லியம்சன் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, பிளங்கெட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவர் 30 ரன்களில் ஆட்டமிழந்தாலும், 12 ஆண்டுகளாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா வைத்திருந்த சாதனையை முறியடித்து விட்டு தான் சென்றார்.

2007ம் ஆண்டு சாதனை

2007ம் ஆண்டு சாதனை

உலக கோப்பை தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன் சேர்த்தவர்களில் முதலிடத்தை இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா பெற்றிருந்தார். ஜெயவர்த்தனா 2007ம் ஆண்டு உலக கோப்பையில் மொத்தம் 548 ரன்கள் குவித்தார்.

12 ஆண்டுகாலம்

12 ஆண்டுகாலம்

அந்த சாதனையை வில்லியம்சன், இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பைனலில் 550 ரன்கள் சேர்த்து 12 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் வில்லியம்சன் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்ளிட்ட 550 ரன்கள் சேர்த்து 4வது இடத்தில் இருக்கிறார்.

முதலிடம் பிடித்தார்

முதலிடம் பிடித்தார்

உலக கோப்பையில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் வரிசையில் தற்போது வில்லியம்சன் முதலிடத்திலும், ஜெயவர்த்தனா 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 539, 3ம் இடத்திலும், ஆரோன் பின்ச் 509, 4-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 482 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

12 ரன்கள் சாதனை

12 ரன்கள் சாதனை

இந்த தொடரை 578 ரன்களுடன் முடித்திருக்கிறார் வில்லியம்சன். இங்கிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை பைனலில், 34 ஆண்டு கால சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை வெறும் 12 ரன்னில் தவறவிட்டார் வில்லியம்சன்.

3வது இடம் பிடித்தார்

3வது இடம் பிடித்தார்

எப்படி என்றால், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரே தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்களில் வில்லியம்சன் 3வது இடம் பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சாப்பல் (686 ரன்கள்) ஆலன் பார்டர் (590 ரன்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். வெறும் 12 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆலன் பார்டரின் சாதனையை முறியடித்து இருப்பார்.

Story first published: Sunday, July 14, 2019, 22:13 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
Kane Williamson set a new world record against England in world cup final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X