
கோலி ரெக்கார்ட்
தற்போதைய இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக மிகச்சிறந்த ரெக்கார்ட் மற்றும் ரன்களை அடித்துள்ளவர் விராட் கோலி தான். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 1960 ரன்களை அடித்துள்ளார். தற்போது இதே இங்கிலாந்து தொடர் தான் விராட் கோலியை ஃபார்முக்கு கொண்டு வரவுள்ளது.

விமர்சனங்கள்
கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள விராட் கோலி குறித்து தினந்தோறும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதுவும் ரசிகர்களின் பக்கம் ஆதரவாக நின்று பேசியுள்ளார்.

கபில் தேவ் கருத்து
அதில், விராட் கோலியை போன்று நான் அதிக போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் ஒரு வீரரின் ஆட்டம் குறித்து பேச கிரிக்கெட் குறித்து அவ்வளவு பெரிதாக தெரிந்திருக்க வேண்டியது இல்லை. வீரர்கள் ரன் அடிக்கவில்லை என்றால், அங்கு குறை இருப்பதாக தான் நாங்கள் நினைப்போம். நீங்கள் நன்றாக ஆடவில்லை என்றால் மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.

நினைத்தே பார்க்கவில்லை
விராட் கோலி போன்ற ஒரு பெரிய வீரர் இப்படி சிரமப்படுவது மிகவும் மனவேதனையாக தான் இருக்கிறது. சதமடிக்காதது பெரிய வருத்தம் தான். ராகுல் டிராவிட், சச்சின், கவாஸ்கர் போன்ற ஒரு வீரரை மீண்டும் பார்ப்போம் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இன்று அவர்களுடன் ஒப்பிட்டு பேசி வருகிறோம். எனவே விராட் கோலி நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.