நீண்டநாள் தோழியை மணமுடித்த கருண் நாயர் -சக வீரர்கள் பங்கேற்பு

Karun Nair Marriage | நீண்ட நாள் தோழியை மணமுடித்த கருண் நாயர்

உதய்பூர் : தனது நீண்ட நாள் தோழி சனயா டங்கரிவாலாவை பிரபல கிரிக்கெட் வீரர் கருண் நாயர் உதய்பூரில் மணமுடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் கருண் நாயரின் திருமணம் மற்றும் வரவேற்பில் பிரபல வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் நேரில் பங்கேற்று வாழ்த்துக் கூறிய சக வீரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.

டெஸ்ட் போட்டியில் முச்சதம்

டெஸ்ட் போட்டியில் முச்சதம்

கர்நாடக அணிக்காக விளையாடிவரும் கருண் நாயர், கடந்த 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 303 ரன்களை அடித்து முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

கடந்த ஆண்டில் நிச்சயம்

கடந்த ஆண்டில் நிச்சயம்

தன்னுடைய நீண்ட நாள் காதலி சனயா டங்கரிவாலா, தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டு தங்களுக்குள் நிச்சயமானதை கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருண் நாயர் பகிர்ந்தார்.

பிரபல வீரர்கள் பங்கேற்பு

பிரபல வீரர்கள் பங்கேற்பு

இந்நிலையில் உதய்பூரில் கருண் நாயரின் திருமணம் அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சக வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், வருண் ஆரோன், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்றோர் பங்கேற்றனர்.

புகைப்படம் பகிர்வு

இந்நிலையில் திருமணத்தில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன், இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் கருண் நாயர் மற்றும் சனயா இருவரும் அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாஹல், தாக்கூரும் பங்கேற்பு

தம்பதியின் திருமண வரவேற்பில் ஸ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஷர்துல் தாக்கூர் மூவரும் கலந்து கொண்டனர். வரவேற்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்வு

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்வு

திருமண வரவேற்பில் தன்னுடைய குடும்பத்தினருடன் பங்கேற்ற அஜிங்க்யா ரஹானே, அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.

வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

கருண் நாயரின் திருமணத்தையொட்டி, அவருக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் வாழ்த்து மழையில் திக்குமுக்காடியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Karun Nair Married his longtime Girlfriend Sanaya Tankariwala
Story first published: Sunday, January 19, 2020, 13:54 [IST]
Other articles published on Jan 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X