For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா இது.. சுரேஷ் ரெய்னாவை இப்படி எல்லோரும் போட்டுக் குத்தினா எப்படி!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து திடீரென விலகி சொந்த ஊருக்குச் சென்ற சுரேஷ் ரெய்னாவை கிண்டலடிப்பது போல ஒரு டிவீட் போட்டுள்ளார் சக வீரர் கேதார் ஜாதவ். இது சர்ச்சையாகியுள்ளது.

Recommended Video

Srinivasan slams Suresh Raina on leaving IPL 2020

ஆனால் நேரடியாக அவர் ரெய்னாவைக் கிண்டலடிக்கவில்லை. மறைமுகமாக டிவீட் போட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார் ரெய்னா. ஆனால் திடீரென அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து விட்டார்.

அவர் வந்ததற்கு என்ன காரணம் என்பது முதலில் புரியவில்லை. சொந்த ஊரில் அவரது மாமாவை யாரோ குத்திக் கொன்று விட்டதால்தான் அவர் திரும்பி வந்தததாக சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் வேறு சில காரணங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஷமி இளம் வீரர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டா இருக்கணும்.. அதுதான் அணிக்கு நல்லதுஷமி இளம் வீரர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டா இருக்கணும்.. அதுதான் அணிக்கு நல்லது

ரூம் சரியில்லை

ரூம் சரியில்லை

ரெய்னா தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறை அவருக்குப் பிடிக்கவில்லையாம். தனக்கு கேப்டன் தோனிக்குக் கொடுத்துள்ளதைப் போன்ற அறை கொடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதுதொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் அவர் அதிருப்தி அடைந்து இந்தியா திரும்பி விட்டதாக சொல்லப்படுகிறது.

கோபத்தில் சீனிவாசன்

கோபத்தில் சீனிவாசன்

இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என் சீனிவாசன் ரெய்னாவை சரமாரியாக விமர்சித்துப் பேட்டி கொடுத்திருந்தார். இது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. கிரிக்கெட் வீரர்களுக்குப் புகழ் சேரச் சேர அது தலையில் சேர்ந்து விடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலர் பழங்காலத்து நடிகர்கள் போல நடந்து கொள்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

முடியாட்ட போய்ருங்க

முடியாட்ட போய்ருங்க

முடிந்தால் மகிழ்ச்சியாக விளையாடுங்க, முடியலையா போய்ட்டே இருங்க. யாரையும் நான் கட்டுப்படுத்த, கட்டாயப்படுத்த விரும்பவில்லை என்று சீனிவாசன் காட்டமாக கூறியிருந்தார். சீனிவாசன் இப்படிச் சொன்னதும் சமூக வலைதளங்களில் ரெய்னாவுக்கு ஆதரவாக பலரும், சீனிவாசனுக்கு எதிராக பலரும் என கமெண்ட்டுகளைப் போட ஆரம்பித்து விட்டனர்.

டிவீட் போட்டு கொட்டிய கேதார்

டிவீட் போட்டு கொட்டிய கேதார்

இந்த நிலையில் சக வீரர் கேதார் ஜாதவ் வெந்த புண்ணில் விரலை விட்டு ஆட்டி விட்டுள்ளார் ஒரு டிவீட் போட்டு. அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "சிறப்பான செயல்பாட்டுக்கு தயாராகி வரும் நிலையில் அதிலிருந்து விலகிச் செல்ல ஆயிரம் காரணங்கள் கிடைக்கும். ஆனால் அதில் தொடர்ந்து பயணிக்க ஒரு காரணம் போதும்.. சாய்ஸ் உங்களோடது" என்று கூறியுள்ளார். இது சுரேஷ் ரெய்னாவை குறி வைத்து போடப்பட்டதாக கருதப்படுகிறது.

செம ரன் குவிப்பு

செம ரன் குவிப்பு

உண்மையில் சுரேஷ் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய நஷ்டம்தான். அவர்தான் இந்த அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர். மொத்தம் 164 போட்டிகளில் விளையாடி 4527 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அளவில் ரன் குவித்த வீரர்களில் 2வது இடத்தில் இருக்கிறார். இவரது ரன்கள் 5368 ஆகும். முதலிடத்தில் விராட் கோலி 5412 ரன்களுடன் இருக்கிறார்.

Story first published: Monday, August 31, 2020, 19:54 [IST]
Other articles published on Aug 31, 2020
English summary
You find 1000 excuses to let go, but only 1 reason to hold on -Kedar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X