For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சி செய்ய மாட்டேன்.. அப்ப தான் விக்கெட் விழும்.. உல்டாவாக சொல்லும் கேதார் ஜாதவ்

துபாய் : கேதார் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்தாலும் நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் ஜாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்தியா நேற்று 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

அதிகம் பந்துவீசி பழகாத அவர் எப்படி பந்துவீச்சாளராக மாறினார் என்ற பின்னணியை அவரே விவரித்துள்ளார்.

பயிற்சி செய்தால் புட்டுக்கும்

பயிற்சி செய்தால் புட்டுக்கும்

அனைத்து வீரர்களும் பயிற்சி செய்தால் தங்கள் திறமை வளரும் என சொல்வார்கள். ஆனால், அதற்கு மாறாக ஜாதவ் தான் பயிற்சி செய்தால் தனக்கு தெரிந்த சுழல் பந்துவீச்சும் சரியாக வராமல் போய் விடும் என்பதால் ஒன்று இரண்டு ஓவர்கள் மட்டுமே பயிற்சியின் போது வீசுவேன் என கூறியுள்ளார்.

எப்படி விக்கெட் வீழ்த்துகிறார்?

எப்படி விக்கெட் வீழ்த்துகிறார்?

அதிக பயிற்சி இல்லாத நிலையில், ஜாதவ் விக்கெட் வீழ்த்துவது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் சரியான இடத்தில் பந்துவீசுவது தான் விக்கெட் வீழ்த்த காரணம் என கூறியுள்ளார்.

உடற்தகுதியில் எப்படி?

உடற்தகுதியில் எப்படி?

கடந்த ஏப்ரல் மாதத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடற்தகுதி முன்னேறி இருப்பதாக கூறுகிறார். அதற்கு காரணம், அந்த அறுவைசிகிச்சை முடிந்த பின் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் என தெரிவித்தார்.

ஜாதவ் பற்றி சொன்ன சர்ப்ராஸ்

ஜாதவ் பற்றி சொன்ன சர்ப்ராஸ்

நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் தோற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ், "நாங்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என தயாராக இருந்தோம். ஆனால், மூன்றாவதாக ஒரு சுழல் பந்துவீச்சாளர் வந்து விக்கெட்களை எடுத்து விட்டார்" என ஜாதவ் பற்றி குறிப்பிட்டார். ஜாதவ் தான் நேற்றைய போட்டியில் முக்கிய திருப்பு முனை என்று பாகிஸ்தான் கேப்டனே கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 20, 2018, 18:22 [IST]
Other articles published on Sep 20, 2018
English summary
Kedhar Jadhav reveals the trick of his bowling and wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X