கம்பீர் அப்பாவாயிட்டாரு... மனைவிக்கு அழகான பெண் குழந்தை!

Posted By:

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீரின் மனைவி நடாஷா, அழகான குட்டி தேவதையை பெற்றுள்ளார். இதுதான் கம்பீர் - நடாஷா தம்பதியின் முதல் குழந்தையாகும்.

முதல் குழந்தையே பெண் குழந்தையாக பிறந்ததால் கம்பீர் தம்பதி மகிழ்ச்சி அடைந்துள்ளதாம்.

KKR captain Gambhir blessed with a baby girl

இதுகுரித்த செய்தியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் கேப்டன் கெளதம் கம்பீருக்கு வாழ்த்துகள். நடாஷா கம்பீருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறது கொல்கத்தா அணி. கேப்டன் கம்பீரே கூட முதல் 3 போ்ட்டிகளில் டக் அவுட் ஆனார். 4வது போட்டியில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 5வது போட்டியில்தான் பார்முக்கு வந்தார்.

இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்த செய்தி கம்பீர் தம்பதியை உற்சாகமாக்கியுள்ளதாம்.

பெண் குழந்தை பிறந்திருச்சுல்ல.. இனிமே எல்லாமே அதிர்ஷ்டம்தான்.. கம்பீர், கம்பீரமா நடை போடுங்க.!

Story first published: Friday, May 2, 2014, 12:37 [IST]
Other articles published on May 2, 2014

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற