வெற்றியை தவறவிட்ட கொல்கத்தா... ஐதராபாத் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!

Posted By:
ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது

கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 11ன் 10வது போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஐதராபாத் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசன் துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் சீசனின் 10வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வென்று, தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.

KKR looking for sixth win against SRH in Kolkatta in the ipl match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராய.ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒன்றில் வென்று, 2 புள்ளிகளுடன் உள்ளன. இன்று மும்பையில் நடக்கும் சீசனின் 9வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் இரண்டுமே இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் சிறப்பாகவே விளையாடியுள்ளன. ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானையும், இரண்டாவது ஆட்டத்தில் மும்பையையும் வென்றது. கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வென்றது. அதே நேரத்தில் சென்னையில் நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோல்வியடைந்தது.

ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கொல்கத்தா கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் செயல்பாடுகள் இந்த சீசனில் இதுவரை மிகவும் பாராட்டும் வகையிலேயே உள்ளன. இன்று இரவு சொந்த மண்ணில் விளையாடுவது, கொல்கத்தாவுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 12 ஆட்டங்களில் கொல்கத்தா 8 முறையும், ஐதராபாத் 4 முறையும் வென்றுள்ளன.

அதே நேரத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் மோதியுள்ள 5 ஆட்டங்களிலும் கொல்கத்தாவே வென்றுள்ளது. டாஸை வென்ற ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. கிறிஸ் லைன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

139 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஐதரபாத்அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில், இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியை ஐதராபாத் அணி பதிவு செய்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஐதராபாத் முதலிடத்தில் உள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kolkotta knight riders looking for their sixth win again sun risers hyderabad in Eden garden
Story first published: Saturday, April 14, 2018, 18:22 [IST]
Other articles published on Apr 14, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற