“நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்”.. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகை ஆதியா ஷெட்டி திருமணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், அதுகுறித்து புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவையும் செய்துள்ளனர்.

கிரிக்கெட் உலகிலும், பாலிவுட் வட்டாரங்களிலும் நேற்று அதிகம் பேசப்பட்ட விஷயம் கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் தான்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்த சூழலில் கடந்தாண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓராண்டாக திருமண நிகழ்ச்சி இறுதி செய்யப்படாமலேயே இருந்தன.

கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலாகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமாகே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலாகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா

கெட்டி மேளம்

கெட்டி மேளம்

இந்நிலையில் தான் நேற்று மும்பையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் தான் ஆதியா ஷெட்டி. இவர்களுக்கு மும்பையில் காண்டாலா மேன்ஷன் என்ற சொகுசு பங்களா உள்ளது. இங்கு தான் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். மிகவும் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

யார்? யார்? பங்கேற்றனர்

யார்? யார்? பங்கேற்றனர்

கிரிக்கெட் உலகில் இருந்து வேகப்பந்துவீச்சாளர்கள் வருண் ஆரோன், இஷான் சர்மா ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பங்களாவிற்குள் திருமணம் நடந்து முடிந்தவுடன் உடனடியாக வெளியே வந்த சுனில் ஷெட்டி, பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி நற்செய்தியை கூறினார்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

இந்நிலையில் இதுகுறித்து திருமண ஜோடியே பதிவிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட ஆதியா, நீ தந்த வெளிச்சத்தில் நான் காதலிக்க கற்றேன். இன்று எங்களின் திருமணம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தது. எங்களின் வாழ்க்கை பயணித்திற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். இதே பதிவை கே.எல்.ராகுல் இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

நட்சத்திரங்களின் வாழ்த்து

நட்சத்திரங்களின் வாழ்த்து

இந்த நட்சத்திர தம்பதிக்கு விராட் கோலி, க்ருணால் பாண்ட்யா, மயங்க் அகர்வால், கஜோல், கல்யாணி பிரியதர்ஷன், ரகுல் ப்ரீத் சிங், ஆலியா பட், கரண் ஜோகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் வாழ்த்துக்கூறி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அழைக்கும் வகையில் மும்பையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Star couples KL Rahul - Athiya shetty shared their marriage pics along with a lovely note in instagram
Story first published: Tuesday, January 24, 2023, 10:07 [IST]
Other articles published on Jan 24, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X