என்னா பேட்டிங்.. 11 கோடிக்கு சும்மாவா எடுத்தாங்க.. 14 பந்தில் 50 ரன் எடுத்து சாதித்த கே.எல்.ராகுல்

Posted By:
குறைவான பந்துகளில் அரை சதம் எடுத்து பஞ்சாப் வீரர் ராகுல் புதிய சாதனை

பஞ்சாப்: ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக அரைசதம் எடுத்து பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பில் 166 ரன்கள் எடுத்தது. தற்போது களமிறங்கி இருக்கும் பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வருகிறது.

50

பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். வெறும் 14 பந்துகளில் இவர் 51 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாதனை

சாதனை

இதற்கு முன்பாக ஐபிஎல் போட்டியில் வார்னர் 2017ல் 4.1 ஓவரில் அரைசதம் அடித்தார். 4.2 கில்கிறிஸ்ட் 2009 அரைசதம் அடித்தார். 4.2 ஓவரில் ரெய்னா 2014ல் அரைசதம் அடித்தார். 4.6 ஓவரில் கெயில் 2013 அரைசதம் அடித்தார். தற்போது ராகுல் 2.5 ஓவரில் அரைசதம் அடித்துள்ளார்.

சும்மாவா

சும்மாவா

இதற்கு முன் ராகுல் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அவரை அந்த அணி இந்த முறை எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக 11 கோடிக்கு இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டதை ராகுல் திருப்தி செய்துள்ளார்.

அவுட்

அவுட்

இந்த நிலையில் இவர் வேகமாக சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 51 ரன்கள் எடுத்து இருந்த போது இவர் விக்கெட்டை இழந்தார். ஷமி பந்தில் போல்டிடம் கேட்ச் கொடுத்து இவர் விக்கெட்டை இழந்தார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Punjab opts bowling against Delhi in IPL 2018. KL Rahul hits the fastest half-century against Delhi in IPL 2018.
Story first published: Sunday, April 8, 2018, 18:52 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற