For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியிலிருந்து கல்தா.. அலறியடித்து கொண்டு கேஎல் ராகுல் விளக்கம்.. எல்லாம் 2 வாரம் தான்

மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்ட்டது.

ஆனால், அவர் அணியில் இடம்பெறவில்லை. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டி கொண்ட தொடரில் ராகுல் இடம்பெறுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கடைசி நேரத்தில் அணியிலிருந்து விலகினார்.

பொறுமை இழந்த ராகுல் டிராவிட்.. டி20 உலகக்கோப்பையில் கே.எல்.ராகுல் இல்லை? நீக்கத்திற்கு காரணம் என்ன? பொறுமை இழந்த ராகுல் டிராவிட்.. டி20 உலகக்கோப்பையில் கே.எல்.ராகுல் இல்லை? நீக்கத்திற்கு காரணம் என்ன?

அணியில் இடமில்லை?

அணியில் இடமில்லை?

தற்போது ஜிம்பாப்வே தொடரிலும் ராகுல் இல்லாததால், டி20 உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சியாளர் டிராவிட், ராகுலுக்கு காயம் அடிக்கடி ஏற்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்கும் நேரமில்லை என்பதால் அணியை விட்டு விலக்கி விடலாம் என்று அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதனால் அலறியடித்து கொண்டு கேஎல் ராகுல் தற்போது ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், என்னை பற்றி 2 விஷயங்கள் தொடர்பான விளக்கங்களை அளிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒன்று என் உடல் நலம் மற்றொன்று போட்டிக்கான உடல் தகுதி. ஜூன் மாதம் எனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்தது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இதனையடுத்து, உடல் தகுதியை மீட்க பயிற்சி செய்தேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். முழு உடல் தகுதியை பெறும் தருவாயில், எதிர்பாராத விதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். இதனால் அணிக்கு திரும்பும் என்னுடைய இலக்கு 2 வாரத்திற்கு தள்ளிப்போனது.

ராகுல் விளக்கம்

ராகுல் விளக்கம்

தற்போது என்னால் முடிந்த வரை, மீண்டும் உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்ப முயற்சி செய்வேன். இந்திய அணிக்கு விளையாடுவது தான் எனக்கு பெருமை. விரைவில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

Story first published: Sunday, July 31, 2022, 16:40 [IST]
Other articles published on Jul 31, 2022
English summary
KL Rahul letter to the fans about his health and fitness இந்திய அணியிலிருந்து கல்தா.. அலறியடித்து கொண்டு கேஎல் ராகுல் விளக்கம்.. எல்லாம் 2 வாரம் தான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X