For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சான் எல்லா பாலும் உள்ள போடுறான்.. தமிழில் பேசிய முரளி விஜய்.. கொந்தளித்த நார்த் இந்தியன்ஸ்!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் தமிழில் பேசி இருக்கிறார்.

By Shyamsundar

செஞ்சுரியன்: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு நீண்ட கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது.

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோற்றுப்போனது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. தமிழக வீரர் முரளி விஜய் இந்த போட்டியில் தமிழில் பேசி இருக்கிறார்.

தமிழில் பேசினார்

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது முரளி விஜய் தமிழில் பேசி இருக்கிறார். அப்போது அவர் கே.எல் ராகுலிடம் ''மச்சான் இந்த ஓவர்ல எல்லா பாலும் உள்ளதான் போடுறான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி இருக்கிறது.

வைரல் ஆனது

இதை அடுத்து அனைத்து கிரிக்கெட் தளங்களும் இந்த வீடியோவை வெளியிட தொடங்கின. பலரும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டனர். இதற்காக நிறைய பேர் அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார்கள்.

ராகுல் தமிழ்

இந்த போட்டியில் விஜய், லோகேஷ் ராகுலிடம் தமிழில் பேசினார். இதனால் அவருக்கு தமிழ் தெரியுமா என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். ராகுல் சில காலம் சென்னையில் இருந்ததாலும், ஹைதராபாத் அணிக்காக விளையாடியதாலும் நன்றாக தமிழ் பேசுவார்.

இந்தில பேசுங்க

ஆனால் சிலர் இதை வைத்தும் பிரச்சனை செய்து இருக்கிறார்கள். ''அவர்கள் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழில் பேச வெட்கமாக இல்லை. அவர்கள் இந்தியில் பேச வேண்டும்'' என்று குறிப்பிட்டு சண்டையிட்டு இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, January 17, 2018, 13:47 [IST]
Other articles published on Jan 17, 2018
English summary
KL Rahul and Murali Vijay speaks in Tamil in 2nd test match against South Africa. In the match Vijay says to Rahul in Tamil that "Macha, indha over la ellam ulla than podaraan" (Bro, he's bowling everything that's going to come in).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X