For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை… சூப்பரோ சூப்பர்… கோலி, பும்ரா நம்பர் ஒன்

துபாய்:ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டது. தற்போது ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.

அந்த பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 310 ரன்கள் கோலி குவித்தார். அதனால், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

உயிரோடு இருக்க காரணம்... அந்த திக் திக்.. 30 விநாடிகள்.. அதிர்ச்சி விலகாத தமிம் இக்பால் உயிரோடு இருக்க காரணம்... அந்த திக் திக்.. 30 விநாடிகள்.. அதிர்ச்சி விலகாத தமிம் இக்பால்

தரவரிசை

தரவரிசை

துணை கேப்டன் ரோகித் சர்மா, 202 ரன்கள் சேர்த்ததால், தரவரிசையில் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளார். கேதார் ஜாதவ் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதால், தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை பிடித்திருக்கிறார்.

353 ரன்கள் குவிப்பு

353 ரன்கள் குவிப்பு

இலங்கை ஒருநாள் தொடரில் ஒரு சதம் 3 அரைசதம் உள்ளிட்ட 353 ரன்கள் விளாசிய தென் ஆப்ரிக்க வீரர் குவின்டன் டீ காக் தொடர் நாயன் விருது பெற்றார். அதனால் தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

டெய்லருக்கு 3வது இடம்

டெய்லருக்கு 3வது இடம்

272 ரன்கள் சேர்த்த டூ பிளசிஸ், பாபர் ஆசம் 5வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார்.

7வது இடத்தில் தவான்

7வது இடத்தில் தவான்

பேட்ஸ்மேன் வரிசையில 7 வது இடத்தில் ஜோய் ரூட் உள்ளார். 8வது இடத்தில் பக்கர் ஜமான், 9வது இடத்தில் மார்டின் கப்தில், 10வது இடத்தில் சாய் ஹோப் உள்ளனர். 12-வது இடத்தில் ஷிகர் தவான் உள்ளார்.

பும்ரா 774 புள்ளிகள்

பும்ரா 774 புள்ளிகள்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 774 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

தாஹிர்

தாஹிர்

ரஷித் கான் 3வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், 4வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இங்கி. முதலிடம்

இங்கி. முதலிடம்

அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து இந்திய அணி உள்ளது. தென் ஆப்ரிக்காவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து 3வது இடத்தை பிடித்திருக்கிறது.

4வது இடம்

4வது இடம்

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியா 4வது இடத்துக்கும் முன்னேறி உள்ளது. தென் ஆப்ரிக்க அணி ஒரு புள்ளியை பெற்றிருக்கிறது. இலங்கை 2 புள்ளிகளை இழந்திருக்கிறது.

Story first published: Sunday, March 17, 2019, 19:45 [IST]
Other articles published on Mar 17, 2019
English summary
Kohli, bumrah maintain top positions in icc odi rankings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X