For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரையிறுதியில் விளையாட கோலிக்கு திடீர் தடை…? இந்தியாவுக்கு சிக்கல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

எட்ஜ்பாஸ்டன்: களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தால் அரையிறுதி போட்டியில் விளையாட கோலிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை தொடரில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால், நிச்சயம் இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்திய ரசிகர்களின் தலையில் இடி விழுவது போன்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அரையிறுதி போட்டியில் விளையாட கோலிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கோலிக்கும், இந்திய அணிக்கும் பெரும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திடீர் சிக்கல்

திடீர் சிக்கல்

கோலிக்கு உருவாகி இருக்கும் இந்த புதிய சிக்கல் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நேற்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர் கொண்டது. முக்கியமான அந்த போட்டியில், 12வது ஓவரை ஷமி வீசினார். அப்போது சவுமியா சர்க்கார் அந்தப் பந்தை பேடில் வாங்க அதனை அவுட் என்று அம்பயரிடம் முறையிட்டார் ஷமி.

மறுத்த அம்பயர்

மறுத்த அம்பயர்

ஆனால் அதனை அவுட் இல்லை என்று அம்பயர் கூறினார். உடனே கோலி டிஆர்எஸ் ரிவ்யூ முடிவை எடுத்தார். தொலைக் காட்சி ரீப்பேளவில் பந்து பேடையும், பேட்டையும் ஒரே நேரத்தில் உரசிப்படி சென்றது. அதனால் 3வது அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார்.

கோலி வாக்குவாதம்

கோலி வாக்குவாதம்

உடனே களத்திலிருந்த கோலி, அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்து முதலில் பேடில்தான் பட்டது, பேட்டில் படவில்லை என்பது அவர் வாதமாகும். ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை. அம்பயர் முடிவை திரும்ப பெறவும் இல்லை.

முதல் முறை கிடையாது

முதல் முறை கிடையாது

கோலி இது போன்று அம்பயரிடம் வாக்குவாதம் செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அம்பயருடன் வாக்குவாதம் ஏற்பட்டு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோலிக்கு தடை?

கோலிக்கு தடை?

இந் நிலையில் ஐசிசியின் விதிகள் கோலிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. காரணம் திருத்தப்பட்ட அந்த விதிகளின் படி, கோலிக்கு 2 போட்டிகளில் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

விதிகள் சொல்வது என்ன?

விதிகள் சொல்வது என்ன?

திருத்தப்பட்ட 2016ம் ஆண்டு விதி சொல்வது என்ன?. ஒரு வீரர் 2 ஆண்டுகளுக்கு உள்ளாக அதாவது 24 மாதங்களுக்குள் 4 டீமெரிட் புள்ளிகள் (எச்சரிக்கை புள்ளிகள்) பெற்றால் அவருக்கு 2ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டியில் தடை விதிக்கப்படும்.

3 எச்சரிக்கை புள்ளிகள்

3 எச்சரிக்கை புள்ளிகள்

ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று கூறுகிறது ஐசிசியின் விதி. கோலி தற்போது 3 எச்சரிக்கை புள்ளிகளுடன் உள்ளதால் அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கு சிக்கல் உண்டாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலிக்கு எதிரான இந்த சிக்கலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, July 3, 2019, 15:10 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
Virat Kohli could face ban for 2 World Cup matches including semi final, fans shocked.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X