பல சாதனைகளை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்ட கோஹ்லி.. ஒரே போட்டியில் ஓஹோன்னு வாழ்க்கை!

Posted By:
India Vs South Africa 1st ODI- இந்தியா அபார வெற்றி..எப்படி தெரியுமா?- வீடியோ

டர்பன்: நேற்று கோஹ்லி அடித்த சதம் இந்த வருடத்தில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும். ஏற்கனவே அவர் டெஸ்ட் போட்டியில் இந்த வருடம் ஒரு சதம் அடித்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று இருக்கிறது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா 270 ரன்கள் இலக்கை மிக எளிதாக அடைந்தது. கோஹ்லியின் சதத்தால் இந்தியா எளிதாக வென்றது.

கோஹ்லி

இதில் கோஹ்லி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 119 பந்துகள் பிடித்த கோஹ்லி 112 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடக்கம்.

இன்னொரு சதம்

இது இந்த வருடத்தில் இவர் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும். இது 33வது ஒருநாள் சதம். டெஸ்ட் ஒருநாள் சேர்த்து இவர் மொத்தம் 54 சதம் அடித்து இருக்கிறார்.

புதிய சாதனை

இது இவர் தென்னாபிரிக்க மண்ணில் அடிக்கும் முதல் சதம் ஆகும். அதேபோல் தென்னாப்பிரிக்கா வரிசையாக பெற்ற ஒருநாள் போட்டி வெற்றியை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார். கோஹ்லிக்கு நேற்று ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

புதிது

புதிது

இதன் மூலம் கோஹ்லி கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார். கங்குலி ஒருநாள் போட்டியில் கேப்டனாக 11 சதம் அடித்து இருக்கிறார். தற்போது கோஹ்லி அதை சமன் செய்து இருக்கிறார். அவர் 142 போட்டிகளில் செய்த சாதனையை இவர் 41 போட்டிகளில் செய்துள்ளார்.

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்

இவர் சச்சினை நெருங்க இன்னும் சில தூரமே இருக்கிறது. அதேபோல் கேப்டனாக ரிக்கி பாண்டிங் 22 சத்தமும், டி வில்லியர்ஸ் 13 சதமும் அடித்துள்ளனர். இரண்டையும் கோஹ்லி விரைவில் முந்துவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, February 2, 2018, 12:07 [IST]
Other articles published on Feb 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற