For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வித்தியாசமான அணுகுமுறை... தனித்திறமை... கேன் வில்லியம்சன் குறித்து மனம்திறந்த கோலி

மும்பை : தென்னாப்பிரிக்காவில் வரும் 17ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை அண்டர் -19 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2008ல் தான் பங்கேற்ற அண்டர் -19 உலக கோப்பை குறித்த மலரும் நினைவுகளை கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ள கேன் வில்லியம்சன், அந்த தொடரில் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தியதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தற்போது கிரிக்கெட் உலகை கலக்கிவரும் ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி உள்ளிட்டவர்கள் 2008 அண்டர் -19 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அவங்க சொல்லிட்டு போயிட்டாங்க.. இப்ப திட்டு வாங்குறது நாங்க தானே.. நொந்து நூடுல்ஸ் ஆன இளம் வீரர்கள்!அவங்க சொல்லிட்டு போயிட்டாங்க.. இப்ப திட்டு வாங்குறது நாங்க தானே.. நொந்து நூடுல்ஸ் ஆன இளம் வீரர்கள்!

17ம் தேதி துவக்கம்

17ம் தேதி துவக்கம்

தென்னாப்பிரிக்காவில் வரும் 17ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதிவரை அண்டர் -19 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 அண்டர்-19 உலக கோப்பை

2008 அண்டர்-19 உலக கோப்பை

இந்நிலையில் கடந்த 2008ல் தனது தலைமையில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தொடரை விராட் கோலி நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில் அந்த தொடர் மறக்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனதில் சிறப்பான இடம்

மனதில் சிறப்பான இடம்

2008ல் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் மிக முக்கியமான தொடராக அமைந்ததை குறிப்பிட்ட விராட் கோலி, தன்னுடைய மனதில் அந்த தொடர் நீங்காத இடம் பிடித்துள்ளதாகவும் கூறினார்.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

அந்த தொடரில் நியூசிலாந்திற்காக களமிறங்கிய கேன் வில்லியம்சன், தனது தனித்துவமான விளையாட்டை பதிவு செய்ததாக விராட் குறிப்பிட்டார். மற்ற வீரர்களிடமிருந்து அவரது ஆட்டம் வித்தியாசமானது என்றும் கூறினார்.

வெற்றி பெற்ற இந்தியா

வெற்றி பெற்ற இந்தியா

அண்டர் -19 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், மழை குறுக்கிட்ட அந்த போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

237 ரன்களை குவித்த விராட்

237 ரன்களை குவித்த விராட்

அரையிறுதியில் 37 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சின் விக்கெட்டை விராட் கோலி எடுக்க, அதற்கு பழிதீர்க்கும் விதமாக, விராட்டின் கேட்சை வில்லியம்சன் பிடித்து அவர் வெளியேற காரணமாக இருந்தார். இந்த தொடரில் 237 ரன்களை விராட் கோலி குவித்திருந்தார்.

விராட் கோலி மகிழ்ச்சி

விராட் கோலி மகிழ்ச்சி

தற்போது கிரிக்கெட் உலகை கலக்கிவரும் ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோரும் அந்த போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையும் விராட் கோலி நினைவு கூர்ந்தார்.

Story first published: Thursday, January 2, 2020, 15:36 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
Kohli on 2008 U-19 World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X