என்ன பாஸ் இப்படி பண்ணி இருக்கீங்க.. உ.பி இடைத்தேர்தல் வாக்காளர் ஸ்லிப்பில் கோஹ்லி பெயர்!

Posted By:
உ.பி. இடைத்தேர்தலில் வாக்காளர் ஸ்லிப்பில் கோஹ்லியின் பெயர்- வீடியோ

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் வாக்காளர் ஸ்லிப்பில் கோஹ்லியின் புகைப்படத்துடன் வாக்காளர் ஸ்லிப் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நாளை உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் இடைதேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளும் பாஜக கட்சி எப்படியாவது வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோஹ்லி மூலம் புதிய பிரச்சனை உருவாகி இருக்கிறது.

வாக்காளர் ஸ்லிப்

வாக்காளர் ஸ்லிப்

இதில் வாக்காளர் பட்டியல் அவர் பெயர் இல்லை. கோஹ்லிக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆனால் அவரது பெயர் வாக்காளர் ஸ்லிப்பில் இடம்பெற்று இருக்கிறது. பட்டியலில் இல்லாத பெயர் ஸ்லிப்பில் எப்படி வந்தது என்று குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

எப்படி

எப்படி

தேர்தல் பணிக்காக சோதனை செய்யும் போது விராட் கோஹ்லி படத்தை பார்த்து இருக்கிறார்கள். அதன் விவரங்களில் விராட் கோஹ்லி என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதேபோல் அவரது சொந்த ஊர், விலாசம் எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை செய்யப்படும்

விசாரணை செய்யப்படும்

தற்போது இதுகுறித்து விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. யார் இந்த தவறை செய்தார்கள் என்று கேட்டு இருக்கிறது. இன்னும் இதில் என்ன முறைகேடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

காமெடி

இந்த விஷயம் இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இதை வைத்து கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர் இது ஒரு ஷாக்கிங்கான, காமெடி விஷயம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Saturday, March 10, 2018, 12:49 [IST]
Other articles published on Mar 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற