For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் கோஹ்லி...!

By Siva

அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோஹ்லி.

உலகக் கோப்பை போட்டிகள் சனிக்கிழமை துவங்கி நடந்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று காலை துவங்கியது. டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

ரோஹித் தவான் அவுட்டான பிறகு கோஹ்லி களமிறங்கினார். மைதானத்திற்குள் வந்ததில் இருந்து கோஹ்லி சிறப்பாக ஆடினார்.

107

107

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோஹ்லி 126 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடக்கம்.

சாதனை

சாதனை

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்துள்ள முதல் இந்திய வீரர் கோஹ்லி தான். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

சச்சின்

சச்சின்

முன்னதாக உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக சச்சின் தான் 98 ரன்கள் எடுத்திருந்தார்.

இரண்டாவது சதம்

இரண்டாவது சதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை ஒரேயொரு சதம் தான் அடிக்கப்பட்டிருந்தது. 2003ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் கோஹ்லி இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் அடிக்கப்பட்டுள்ள சதங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

கங்குலி சாதனை சமன்

கங்குலி சாதனை சமன்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சவ்ரவ் கங்குலி அதிகபட்சமாக 22 சதங்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது 22வது ஓ.டி.ஐ. சதத்தை அடித்து கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார் கோஹ்லி.

Story first published: Sunday, February 15, 2015, 16:38 [IST]
Other articles published on Feb 15, 2015
English summary
Virat Kohli has become the first Indian to score a century against Paksitan in the World cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X