For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதெப்படிங்க திடீர்னு பந்தை மாற்றலாம்.. ஸ்டிரைக்கில் குதித்த இலங்கை பேட்ஸ்மென்!

செயின்ட் லூசியா: இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்களில் ஆட்டமிழந்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

பேட் செய்ய வராத இலங்கை

பேட் செய்ய வராத இலங்கை

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் அம்பயர்கள் களத்திற்கு வந்த பின்னரும் இலங்கை வீரர்கள் யாரும் களத்திற்கு வரவில்லை. இதற்குக் காரணம், அம்பயர்கள் மூன்றாவது நாள் காலை பந்தை மாற்றியதால் இலங்கை வீரர்கள் யாரும் களத்திற்கு வரவில்லை.

பந்தை மாற்றியதால்

பந்தை மாற்றியதால்

நீண்ட வாக்குவாதங்களுக்கு பிறகு இலங்கை அணி களமிறங்கி விளையாடத் தொடங்கியது. இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் களத்திற்கு வராததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது

பந்தை மாற்றியது ஏன்

பந்தை மாற்றியது ஏன்

உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான் புதிய பந்தைத் தேர்வு செய்தனர். ஐசிசி விதி 41.3 ன்படி புதிய பந்தை தேர்வு செய்தனர். ஆனால் இதை இலங்கைத் தரப்பு ஏற்கவில்லை.

திடீர்னு மாற்றினால் எப்படி

இலங்கை அணி தரப்பில் கூறியதாவது , பந்து மாற்றுவது குறித்து நடுவர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தெரிவித்ததாகவும் மற்றும் அதற்கான போதிய வீடியோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் கூறினர்.



Story first published: Sunday, June 17, 2018, 10:07 [IST]
Other articles published on Jun 17, 2018
English summary
Sri Lankan players refused to come to the ground to bat against WI after ther Windies opted for a new ball.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X