For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவானை இந்திய கிரிக்கெட் இழந்துவிட்டது... கங்குலி இரங்கல்

டெல்லி : உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவானை இந்திய கிரிக்கெட் இழந்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

750 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான செயல் என்றும் அதற்கு ஆண்டுக்கணக்கில் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Lost a giant of domestic cricket: Sourav Ganguly on Rajinder Goels death

மேலும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருண் துமாலும் ராஜேந்தர் கோயலின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள ராஜேந்தர் கோயல் மறைவிற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருண் துமால் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவானை இந்திய கிரிக்கெட் இழந்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 750 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது எளிதான செயலல்ல என்று கூறியுள்ள அவர், அதற்கென கோயல்ஆண்டுக்கணக்கில் தீவிரமாக உழைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் அழைப்பு.. ஆனா அந்த சீனியருக்கு மட்டும் கல்தா.. பிசிசிஐ அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!எல்லோருக்கும் அழைப்பு.. ஆனா அந்த சீனியருக்கு மட்டும் கல்தா.. பிசிசிஐ அதிரடி முடிவு.. கசிந்த தகவல்!

25 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள கோயல், இதன்மூலம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 22, 2020, 12:54 [IST]
Other articles published on Jun 22, 2020
English summary
I salute Rajinder Goel's efforts -Sourav Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X