For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: அப்போ தோனிக்கு நடந்திச்சு... இப்போ இவருக்கு..! ஒரே விஷயம்.. ஆனா இரண்டு சம்பவம்

Recommended Video

IPL 2019:Rajasthan vs Kolkata | ஒரே விஷயம்.. ஆனா மூன்று சம்பவம்- வீடியோ

ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் எப்போதாவது அவுட் என்று தெரிந்தும்.. அவுட் கொடுக்காமல் இருந்த சம்பவங்கள் நடப்பது ஒன்று. அதுபோன்று நேற்றைய போட்டியில் நடைபெற்ற சம்பவம் தான் தற்போது ஐபிஎல் தொடரின் வைரல்.

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. அதில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே அடித்தது.

பொ.......றுமையாக ஆடினோம்... தோத்துட்டோம்.. கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி குறித்து ரகானே புலம்பல் பொ.......றுமையாக ஆடினோம்... தோத்துட்டோம்.. கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி குறித்து ரகானே புலம்பல்

ஸ்மித் 73 ரன்கள்

ஸ்மித் 73 ரன்கள்

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 53 பந்துகளில் 73 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுமையாக ஆடியதே அணியின் குறைவான ஸ்கோருக்கு காரணமாக அமைந்தது.

வென்றது கொல்கத்தா

வென்றது கொல்கத்தா

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி இந்த 140 ரன்கள் இலக்கினை 13.5 ஓவர்களில் எளிதாக கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக க்றிஸ் லின் 50 ரன்களை அடித்தார்.

சுவாரசிய சம்பவம்

சுவாரசிய சம்பவம்

இந்த போட்டியில் க்றிஸ் லின் 13 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. 140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான லின்னும், நரைனும் இணைந்து 32 ரன்களை குவித்தனர். ஆட்டம் ராஜஸ்தான் அணியிடமிருந்து கைமீறி போனது.

பெயில்ஸ் விழவில்லை

இதுபோன்ற சூழ்நிலையில், அந்த அணிக்கு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது குல்கர்னி 4வது ஓவரை வீசினார். அவர் வீசிய 2வது பந்து ஸ்டம்பில் பட்டது. ஆனால் ஸ்டிக்கோ, பெயில்சோ கீழே விழவில்லை.

பவுண்டரி கிடைத்தது

பவுண்டரி கிடைத்தது

அதற்கு பதிலாக ஸ்டெம்பில் பட்ட பந்து நேராக பவுண்டரிக்கு ஓடியது. ஸ்டிக் விழாததால் விக்கெட்டும் கிடைக்கவில்லை. அவுட் தர அம்பயரோ மறுத்து விட்டார். அரங்கமே என்ன நடப்பது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பி போனது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

இந்த சம்பவத்தால் குல்கர்னியும், கேப்டன் ரகானேவும் கடுமையாக அதிருப்தியடைந்தனர். கடந்த போட்டியின்போது தோனி த்ரோ செய்தபோது கூட பெயில்ஸ் விழாமல் இருந்ததால் ராகுல் அவுட் ஆகாமல் தப்பியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.

Story first published: Monday, April 8, 2019, 11:46 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
Lynn Escapes as Zing Bails Refuse to Dislodge Again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X