தென்னாப்பிரிக்க வீரரின் இந்த ஒரு கேட்ச்.. இது போதும் பாஸ்.. நீங்களும் பெரிய கைதான்!

Posted By:

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. கோஹ்லி அதிரடியாக 75 ரன்கள் எடுத்தார்.

முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 289 ரன்கள் எடுத்தது. ஆனால் மழை காரணமாக இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது.

அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது. இதில் மார்க்ராம் பிடித்த கேட்ச் ஒன்று மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இவர் கேப்டனாக ஆன பின் நடந்த இரண்டு போட்டியிலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இதனால் நேற்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என தீவிரமாக உழைத்தார். முக்கியமாக பிங்க் உடையில் தோற்ககூடாது என்று கவனமாக இருந்தார்.

கேட்ச்

இந்த போட்டியிலும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட முயற்சி செய்து அவுட் ஆனார். அவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்த போது அதை பறந்து போய் பிடித்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ராம். மிகவும் அதிக உயரத்திற்கு இவர் குதித்தது வைரல் ஆனது.

சூப்பர்

சூப்பர்

இந்த கேட்சை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் ப்ப்பா என்ன கேட்ச் என்று குறிப்பிட்டு அவர் பறக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சிறந்த கேட்சை

இவர் ஐசிசி வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் இதுதான் இந்த நாளில் சிறந்த ஆட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, February 11, 2018, 12:22 [IST]
Other articles published on Feb 11, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற