For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐ.பி.எல்: தொடரும் மேக்ஸ்வெல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி!!

By Mathi

சார்ஜா: 7வது ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி முதலிடத்தில் இருக்கிறது.

7வது ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் 9வது லீக் போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் தவான் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக இர்பான் பதான் சேர்க்கப்பட்டார். அதேபோல் பஞ்சாப் அணியில் ரிஷி தவான் மற்றும் சந்தீப் சர்மா இடம்பெற்றனர்.

புஜரா- சேவாக் நிதானம்

புஜரா- சேவாக் நிதானம்

பஞ்சாப் அணியின் புஜாரா- சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது ஓவரை இர்பான் பதான் வீசினார். இந்த ஓவரில் சேவாக் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். புவனேஸ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் சேவாக் ஒரு சிக்ஸர் அடித்தார். ஸ்டெய்ன் வீசிய 5-வது ஓவரில் புஜாரா 3 பவுண்டரிகளை விளாசினார்.

30 ரன்னில் சேவாக் அவுட்

30 ரன்னில் சேவாக் அவுட்

மிஸ்ரா வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸர் அடித்த சேவாக் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 30 ரன் எடுத்தார்.

பஞ்சாப் சிங்கம் மேக்ஸ்வெல்

பஞ்சாப் சிங்கம் மேக்ஸ்வெல்

பின்னர் கடந்த இரண்டு போட்டிகளிலும் அசத்திய மேக்ஸ்வெல் களம் இறங்கினார். ஆடுகளம் பரபரப்பானது. கம்ரான் ஷர்மா வீசிய 10வது ஓவரின் 3 பந்தில் இமாலய சிக்ஸர்களை அடித்து மேக்ஸ்வெல் அதிரடியை தொடங்கினார். அடுத்த பந்தில் அழகாக மேக்ஸ்வெல் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார்.

35 ரன்களில் புஜாரா அவுட்

35 ரன்களில் புஜாரா அவுட்

11-வது ஓவரின் கடைசி பந்தில் புஜாரா 32 பந்தில் 6 பவுண்டரியுடன் 35 ரன் எடுத்து ஷமி பந்தில் வெளியேறினார்.

இமாலய சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல்

இமாலய சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல்

பதான் வீசிய 12வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை மிஸ்ரா வீசினார். இந்த ஓவரில் 4 இமாலய சிக்ஸர்களை விளாசினார் மேக்ஸ்வெல். தொடர்ந்தும் ஹைதராபாத் பந்துகளை அவர் விட்டு வைக்கவில்லை.

43 பந்துகளில் 95 ரன்கள்..

43 பந்துகளில் 95 ரன்கள்..

மேக்ஸ்வெல் 43 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 95 ரன்களைக் குவித்தார்.

20 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களைக் குவித்தது.

புவனேஸ்வர் 3 விக்கெட்டுகள்

புவனேஸ்வர் 3 விக்கெட்டுகள்

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி சார்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தடுமாறிய ஹைதராபாத்

தடுமாறிய ஹைதராபாத்

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் தவான் 1 ரன்னில் அவுட் ஆனார். வார்னர் 9 ரன்களில் பாலாஜி பந்தில் ஆட்டம் இழந்தார்.

சுருண்ட ஹைதராபாத்

சுருண்ட ஹைதராபாத்

அந்த அணியின் வீரர்கள் சரியாக விளையாடாததால் 121 ரன்களிலே சுருண்டது.

72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இதனால் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாலாஜிக்கு 4 விக்கெட்டுகள்

பாலாஜிக்கு 4 விக்கெட்டுகள்

பஞ்சாப் அணி சார்பில் பாலாஜி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

ஹைதராபாத் சன் ரைசர்ஸை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தானை அணிகளையும் பஞ்சாப் தோற்கடித்து இருந்தது. ஹைதராபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

Story first published: Wednesday, April 23, 2014, 8:46 [IST]
Other articles published on Apr 23, 2014
English summary
Glenn Maxwell produced yet another blistering knock of 43-ball 95 before Laxmipathy Balaji returned with a four-wicket haul as Kings XI Punjab notched up a crushing 72-run win over Sunrisers Hyderabad in their third IPL-7 match here last night.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X