யாருமே கவனிக்காத சின்ன பையன்.. சென்னையை கதறவிட்ட 20 வயது மாயங்க் மார்கண்டே!

Posted By:

மும்பை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் மாயங்க் மார்கண்டே சென்னை அணியை மிரட்டி இருக்கிறார். இது அவரது முதல் ஐபிஎல் போட்டியாகும்.

இவரது ஸ்பின் பவுலிங்கில் நேற்று மட்டும் மூன்று விக்கெட் விழுந்தது. சென்னை கேப்டன் டோணியே இவரது பந்து வீச்சை கணிக்க முடியாமல் அவுட் ஆனார்.

இவர் எங்கிருந்து வந்தார், எப்படி திடீர் என்று இவ்வளவு சிறப்பாக பந்து வீசுகிறார் என்று எல்லோரும் இவரை கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள். நேற்றைய போட்டியில் மும்பை வெற்றிபெற்று இருந்தால் இவர்தான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்.

எப்படி அணிக்கு வந்தார்

இவரை மும்பை அணி வெறும் 20 லட்சம்தான் கொடுத்து எடுத்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இவர் மும்பை இந்தியன் அணியின் பயிற்சி ஆட்டங்களில் இரண்டு வருடமாக கலந்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்பது நிறைய அணிக்கு தெரியாமல் இருந்துள்ளது. மும்பை அணி கூட நேற்றைய போட்டி நடக்கும் வரை இவர் மீது நம்பிக்கை செலுத்தவில்லை.

ஸ்பின்

மும்பை அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஸ்பின் பவுலர்கள் இல்லை. இதை சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூட குறிப்பிட்டு சொல்லி இருந்தார். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று மாயங்க் மார்கண்டே பந்து வீசி இருக்கிறார். இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூக்லி பவுலிங்

கூக்லி பவுலிங்

லெக் ஸ்பின் போடும் இவர் கையை லேசாக மாற்றி சுழற்றி அதை கூக்லியாக மாற்றுகிறார். இவர் கூக்லியில்தான் நேற்று மூன்று விக்கெட் விழுந்தது. அதுவும் சாதாரண விக்கெட் இல்லை, டோணி, அம்பதி ராயுடு என்ற இரண்டு முக்கியமான வீரர்ககளை இவர் விக்கெட் எடுத்தார். கடைசியாக தீபக் சாஹரை இவர்தான் விக்கெட் எடுத்தது.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

நேற்றைய போட்டியில் இவர் பந்தில் கேதார் ஜாதவ் எல்.பி.டபிள்யு முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அம்பயர் இவருக்கு விக்கெட் கொடுக்கவில்லை. ரோஹித்தும் இவர் பேச்சை கேட்காமல், ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால் அந்த விக்கெட் மட்டும் சரியாக கொடுக்கப்பட்டு இருந்தால் நேற்று சென்னை வெற்றி பெற்று இருப்பது சந்தேகம்தான்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mayank Markande becomes overnight star of MI after First IPL 2018. He took three wicket including Dhoni's wicket.
Story first published: Sunday, April 8, 2018, 14:22 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற