For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்ய வருகிறார் “கிங் கோலி”.. எச்சரிக்கை மணி அடித்த இங்கிலாந்து வீரர்

லண்டன் : இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

அங்கே இந்திய அணியின் கேப்டன் கோலி சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோலியின் பார்ம் கடந்த இரு வருடங்களாக உச்சத்தில் இருக்கிறது.

அதையொட்டி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் விராட் கோலி ஆட்சி புரிவார் என கூறி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இது ஒரு எச்சரிக்கை என்பதாகவே இருக்கிறது.

தோல்வி மேல் தோல்வி

தோல்வி மேல் தோல்வி

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஒரு வருட தடை காலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை மறந்து, தோல்வி அடையாமல் இருக்கவே தடுமாறி வருகிறது. தற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் தொடர் மற்றும் நடந்து வரும் தென்னாபிரிக்கா தொடரிலும் தோல்வி மேல் தோல்வியாக சந்தித்து வருகிறது ஆஸ்திரேலியா.

நம்பிக்கையுடன் இருக்கும் இந்தியா

நம்பிக்கையுடன் இருக்கும் இந்தியா

இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. இந்திய அணி வலுவான இங்கிலாந்து அணியிடம் அதன் சொந்த மண்ணில் அடி வாங்கி இருந்தாலும், அடுத்து இந்திய மண்ணில் வலுவற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்து நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது.

விராட் கோலி ஆட்சி புரிவார்

விராட் கோலி ஆட்சி புரிவார்

இந்தியா ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுமா என்ற கேள்வியோடு கோலி ஆஸ்திரேலியாவிலும் கலக்குவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது. ரசிகர்கள் மனதில் இருந்த கேள்வியை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்-இடம், "ஆஸ்திரேலியாவில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிவாரா?" என கேட்டது. இதற்கு ஒரே வார்த்தையில் "ஆம்" என பதில் அளித்து இருந்தார் வான்.

[என்னை மன்னிச்சுருங்க.. தயவுசெஞ்சு எனக்கு தடை போட்றாதீங்க.. கோலி யாரிடம் இப்படி கெஞ்சினார் தெரியுமா?]

கோலியை சமாளிக்குமா ஆஸ்திரேலியா?

கோலியை சமாளிக்குமா ஆஸ்திரேலியா?

தோல்விகளால் மிகவும் சோர்ந்து போய் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு கோலியை சமாளிப்பது பெரிய வேலையாக இருக்கும். இங்கிலாந்தில் இந்திய அணி தோற்றது. ஆனால், கோலி எல்லா போட்டியிலும் ரன்கள் குவித்த வண்ணம் இருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

[இது ரொம்ப ஓவர்!! கோலியை பிடிக்காது என்ற ரசிகர்.. இந்தியாவை விட்டு வெளியே போ என்ற கோலி]

Story first published: Tuesday, November 13, 2018, 21:27 [IST]
Other articles published on Nov 13, 2018
English summary
Michael Vaughan agrees Virat Kohli will reign supreme in Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X