For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் போட்டியிலேயே எஸ்ஆர்எச் வீரருக்கு வந்த சோதனை... தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு

ஷார்ஜா : நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

4 Reasons Why Hyderabad Team Lost against Bangalore | Oneindia Tamil

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய 5வது ஓவரை போட்ட நிலையில், அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ஆயினும் அடுத்த இரண்டு பந்துகளை போட்ட அவர் வலி தாங்க முடியாமல் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் அணி நிர்வாகம் கூறியுள்ளது.

பயிற்சியிலேயே என்னா அடி.. உண்மையில் இவர்தான் ரெய்னாவிற்கு மாற்றா?.. சிஎஸ்கேவில் விரைவில் டிவிஸ்ட்!பயிற்சியிலேயே என்னா அடி.. உண்மையில் இவர்தான் ரெய்னாவிற்கு மாற்றா?.. சிஎஸ்கேவில் விரைவில் டிவிஸ்ட்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் தோல்வி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் தோல்வி

ஐபிஎல்லின் 3வது போட்டியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 163 ரன்களை இலக்காக கொடுத்திருந்தது. ஆயினும் இந்த ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 10 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்ஆர்எச் தோல்வியுற்றது.

கணுக்காலில் காயம்

கணுக்காலில் காயம்

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், 5வதாக தன்னுடைய ஓவரை போட்டபோது, தன்னுடைய கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவர் தன்னுடைய ஓவரை போட முற்பட்டார். ஆயினும் வலி தாங்க முடியாமல் அவர் ஆட்டத்திலிருந்து இடையிலேயே வெளியேறினார்.

தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு

தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு

ஆயினும் 10வது பேட்ஸ்மேனாகவும் அவர் களமிறங்கி விளையாட முற்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் தீவரமாக உள்ளதாகவும் அவர் தொடரிலிருந்தே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுளளது.

முகமது நபி விளையாட வாய்ப்பு

முகமது நபி விளையாட வாய்ப்பு

இதனிடையே, மார்ஷ்க்கு பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கேன் வில்லியம்சன் அல்லது முகமது நபி ஆகியோர் அவருக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், கேன் வில்லியம்சனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 22, 2020, 15:46 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
If Marsh is ruled out of the tournament, SRH have some other quality options
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X