For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களுக்கே இது அதிர்ச்சி தான்.. முதல் டி20ல் இந்தியாவின் தோல்வி.. நியூசி, கேப்டன் சுவாரஸ்ய தகவல்!

ராஞ்சி: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற விதம் எங்களுக்கே ஆச்சரியமாக தான் உள்ளதாக நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அரைசதம் விளாச 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பவர் ப்ளேவிலேயே முடிவை காட்டிவிட்டது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 7, இஷான் கிஷான் 4, ராகுல் திரிபாதி 0 என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் (47) - ஹர்திக் பாண்ட்யா (21) ஜோடி சீராக ரன்களை உயர்த்திய போதும் வெற்றி காண முடியவில்லை. இறுதி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனி ஆளாக 50 ரன்களை அடிக்க 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 ரசிகர்கள் குற்றச்சாட்டு

ரசிகர்கள் குற்றச்சாட்டு

இந்நிலையில் இந்த களத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ராஞ்சி மைதானத்தில் 2வது பேட்டிங் செய்வது தான் சுலபமானது. பனிப்பொழிவுக்கு இடையே 2வதாக பந்துவீச முடியாது. இதற்காக தான் பாண்ட்யா டாஸ் வென்று பவுலிங் எடுத்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக 2வது இன்னிங்ஸில் அதிகப்படியாக டேர்ன் ஆனது. இதனால் தான் இந்தியா விக்கெட்டை பறிகொடுத்தது.

 மிட்செல் சாண்ட்னர் விளக்கம்

மிட்செல் சாண்ட்னர் விளக்கம்

இதனை நியூசி, கேப்டனே ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இரு அணி வீரர்களுக்கே சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது. ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அவ்வளவு ஸ்பின் ஆனது. 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சென்ற சூழலில், டி20ல் சற்று ஸ்பின் ஆவது மகிழ்ச்சியை தருகிறது. டாஸின் போதே இங்கு இலக்கை விரட்டுவது எளிமையானது என்பது எங்களுக்கு தெரியும். குறிப்பாக பனிப்பொழிவு அச்சுறுத்தும்.

 பவர் ப்ளே டேர்ன்

பவர் ப்ளே டேர்ன்

அந்த சவாலை ஏற்றுக்கொண்டு தான் களமிறங்கினோம். பவர் ப்ளேவிலேயே பந்து நன்கு டேர்ன் ஆவதை உணர்ந்தோம். இதனால் அடுத்தடுத்து ஸ்பின்னர்களாக வீசி தொடக்கத்திலேயே விக்கெட்களை வீழ்த்தியது நல்லதாக அமைந்துவிட்டது. எனினும் இந்தியா கடைசி வரை போராடி மிகவும் நெருக்கமான போட்டியாக மாற்றிவிட்டது என சாண்ட்னர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 28, 2023, 8:07 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Skipper Mitchell santner explanation oh how New Zealand beats Team India in 1st T20 match, here is the interesting facts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X