For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலையில் பட்டு தெறித்து.. எகிறி குதித்து.. கண்ணாடி விழுந்து.. எல்லோரையும் பதறவைத்த சிக்ஸ்!

ஹாமில்டன் : நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் அடித்த சிக்ஸ் ஒன்று எல்லோரையும் பதற வைத்தது.

பாதுகாவலர் ஒருவரின் தலையை பதம் பார்த்த அந்த பந்து, அதன் பின் ஒரு பெண்ணை எகிறி குதிக்க வைத்து, பெரிய களேபரத்தை உண்டாக்கியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விரைவாக ரன் குவிக்க வேண்டி மிட்செல் சான்ட்னர் அதிரடியாக அடித்து ஆடிய போது தான் இந்த சம்பவம் நடந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்து நாட்டின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து ரன் குவிப்பு

நியூசிலாந்து ரன் குவிப்பு

அந்த அணியின் டாம் லாதம் 105, ராஸ் டெய்லர் 53, வாட்லிங் 55, டாரில் மிட்செல் 73 ரன்கள் குவிக்க அந்த அணி 315 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது.

மிட்செல் சான்டனர் அதிரடி

மிட்செல் சான்டனர் அதிரடி

அப்போது களத்தில் இருந்த மிட்செல் சான்டனர் அதிரடியாக ரன் சேர்க்க முயன்றார். ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து ஒன்றை மிட் ஆன் திசையில் தூக்கி சிக்ஸ் அடித்தார்.

தலை மீது விழுந்த பந்து

தலை மீது விழுந்த பந்து

அந்த பந்து பவுண்டரி எல்லையை தாண்டி சில அடி தூரத்தில் இருந்த பாதுகாவலரின் தலை மீது விழுந்தது. பந்தை பிடிக்க வந்த இங்கிலாந்து வீரர் தலையில் கை வைத்து நிற்க, அந்த பாதுகாவலரும் தலையை பிடித்துக் கொண்டு நின்றார்.

எகிறி குதித்த பெண்

எகிறி குதித்த பெண்

அவர் தலையில் பட்டு தெறித்த பந்து அடுத்து சில அடி தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பெண் மீது விழப் போனது. அவர் பதறிப் போய் பின்புறமாக எகிறி குதித்தார். இந்த பதற்றத்தில் அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் கீழே விழுந்தது.

போட்டி தடைபட்டது

போட்டி தடைபட்டது

அந்த பாதுகாவலருக்கு என்ன ஆனதோ? என அனைவரும் பதறினர். இங்கிலாந்து வீரர், அம்பயர் உள்ளிட்டோர் அவரைச் சென்று விசாரித்தனர். அதனால், போட்டியும் சிறிது நேரம் தடைபட்டது.

முதலுதவி செய்யப்பட்டது

முதலுதவி செய்யப்பட்டது

அந்த பாதுகாவலர் தான் நன்றாக இருப்பதாக சைகை காட்டினார். அதன் பின்னரே போட்டி துவங்கியது. பின்னர், அந்த பாதுகாவலருக்கு மருத்துவ ஊழியர் ஒருவர் தலையில் ஐஸ் வைத்து முதலுதவி செய்தார்.

நியூசிலாந்து ஸ்கோர்

நியூசிலாந்து ஸ்கோர்

இத்தனை கலவரத்துக்கும் காரணமான மிட்செல் சான்ட்னர் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 375 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அபார ஆட்டம்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியின் பர்ன்ஸ் 101, ஜோ ரூட் 114* ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து முதல் இன்னிங்க்சை தொடர்ந்து ஆடி வருகிறது.

Story first published: Sunday, December 1, 2019, 12:03 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
Mitchell Santner hit a six, which hit hard on security guard’s head.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X