For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

251வது பந்தில் வீழ்ந்தார்.. 251வது வீரராக எழுந்தார்.. தல தோனியின் அசத்தல் பக்கம்

மும்பை: தல தோனியின் சாதனைகளைப் பட்டியலிட வேண்டும் என்றால் நாட்கள் பத்தாது. அவரைப் பற்றிய இன்னும் ஒரு சுவாரஸ்யச் செய்தி இது.

Recommended Video

Facts on Dhoni's ODI and Test debut

இந்திய கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் வந்து போயுள்ளனர். ஆனால் நிலைத்து நின்று நீங்கா புகழுடன் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் முக்கியமானவர் நம்ம தல தோனிதான்.

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கலக்கியவர் தோனி. அவரைப் போல சாதனை படைத்த கேப்டன் இந்தியாவில் இதற்கு முன்பு இல்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகம்தான்.

Lockdown 4.0 : விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி பெற அனுமதி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!Lockdown 4.0 : விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி பெற அனுமதி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சுவாரஸ்ய சாதனை

சுவாரஸ்ய சாதனை

சரி தோனியைப் பற்றிய அந்த சுவாரஸ்யம் என்ன என்று பார்ப்போமா.. 2004ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் தோனி. அப்போது விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்ட தோனி, ரன் எதுவும் எடுக்காமல் அனைவரையும் ஏமாற்றினார். ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த தோனிக்கு அப்போட்டி ஏமாற்றம்தான். அந்தப் போட்டியில் வீசப்பட்ட 251வது பந்தில்தான் தோனி ரன் அவுட் ஆனார்.

டெஸ்ட் வீரராக உருவெடுத்தார்

டெஸ்ட் வீரராக உருவெடுத்தார்

ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி ஆட்டத்தைக் காட்டி தான் யார் என்பதை நிரூபித்தார் தோனி. அதன் பிறகு அவரது அதிரடி வேட்டைக்கு தனி ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. ஒரு நாள் கிரிக்கெட்டின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார் தோனி. பிறகென்ன அடுத்த ஆண்டு அதாவது 2005ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் தோனி.

251ம் தோனியும்

251ம் தோனியும்

2005ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி அறிமுகமானார். இதில்தான் ஒரு சுவாரஸ்யம். அதாவது அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில் 251வது பந்தில் ஆட்டமிழந்த தோனி, இந்தியாவின் 251வது டெஸ்ட் வீரராக அடுத்த ஆண்டில் களம் இறங்கினார். என்ன ஒரு ஒற்றுமை பாருங்க. ஆனால் இடைப்பட்ட இந்தக் காலத்தில் அவர் முக்கியமான வீரராக உருவெடுத்திருந்தார் என்பதுதான் தோனியின் ஸ்பெஷல்.

50 நாளில் பிறந்த நாள்

50 நாளில் பிறந்த நாள்

தோனியின் சாதனைகளில் பல பல சுவாரஸ்யங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. தோனியின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தோனியின் புகழ் பாடும் செய்திகள், தகவல்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் நிச்சயம் தோனி என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Tuesday, May 19, 2020, 10:33 [IST]
Other articles published on May 19, 2020
English summary
MS Dhoni and the number 251
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X