தோனி வாங்கிய புது சொகுசு கார்.. எப்பா இப்படி ஒரு வசதிகளா??.. ஜாலியாக வலம் வந்த ருதுராஜ் கெயிக்வாட்!

ராஞ்சி: சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சக வீரர்கள் புதிய காரில் ஊரை வலம் வந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி தற்போது 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். பல்வேறு தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கிரிக்கெட்டை தவிர வேறு பல்வேறு விஷயங்களிலும் தோனி மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதில் மிகவும் ஸ்பெஷலானது அவரின் கார் மோகம் தான்.

சிஎஸ்கே அடுத்த கேப்டன் அவர் தான்.. 4 ஆண்டுக்கு முன்பே முடிவு செய்த தோனி.. வசீம் ஜாஃபர் சூப்பர் தகவல்சிஎஸ்கே அடுத்த கேப்டன் அவர் தான்.. 4 ஆண்டுக்கு முன்பே முடிவு செய்த தோனி.. வசீம் ஜாஃபர் சூப்பர் தகவல்

 தோனியின் கார் மோகம்

தோனியின் கார் மோகம்

எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு என தனியாக பெரிய குடோனையே உருவாக்கி வைத்துள்ளார். இதில் 1969 ஃபோர்டு முஷ்டாங், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷாடோ, ஹம்மர் ஹெச் 2 உள்ளிட்ட பல தனித்துவமான கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்நிலையில் இதில் புதுவரவு ஒன்று வந்துள்ளது.

புது கார்

புது கார்

கியா நிறுவனத்தின் EV 6 என்ற சொகுசு காரை தோனி புதிதாக வாங்கியுள்ளார். அந்நிறுவனம் தயாரித்த முதல் மின்சார கார் இந்த மாடல் தான் ஆகும். இதுவரை இந்தியாவில் 200 கார்களை மட்டுமே விற்றுள்ளது. ஏனெண்றால் அந்த அளவிற்கு இந்த காரின் விலை இருக்கிறது. இந்திய மதிப்புப்படி ரூ. 59.95 லட்சத்திற்கு இந்த காரானது விற்கப்படுகிறது.

ஜாலியான பயணம்

ஜாலியான பயணம்

அதிக தொகை கொடுத்த காரை வாங்கிய எம்.எஸ்.தோனி, அதனை தனது சிஎஸ்கே அணி நண்பர்களான ருதுராஜ் கெயிக்வாட், கேதர் ஜாதவ் ஆகியோரை அமரவைத்து நகரத்தை வலம் வந்துள்ளார். கிரே கலர் காரை அவர் ஸ்டைலாக ஓட்டிய வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

ஓய்வு

ஓய்வு

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் எம்.எஸ்.தோனி விளையாடவுள்ள கடைசி சீசன் எனக்கூறப்படுகிறது. 41 வயதாகும் அவர் சென்னையில் தான் தனது கடைசி போட்டியை விளையாடுவேன் எனக்கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு ஹோம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்பதால் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni buys a New Car and takes a Ruturaj gaikwad and Kedar jadhav for Raid
Story first published: Friday, November 18, 2022, 18:58 [IST]
Other articles published on Nov 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X