For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட பிட்னஸ் எல்லாம் நல்லாதான் இருக்கு... போட்டிக்குதான் பிட்டா இல்ல.. மியான்டட்

துபாய் : சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உடலளவில் பிட்டாக உள்ளதாகவும் ஆனால் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர் பிட்டாக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் தோனி 136 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

சோதனை மேல் சோதனை... பிராவோ இன்னும் சில வாரங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்சோதனை மேல் சோதனை... பிராவோ இன்னும் சில வாரங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்

6வது இடத்தில் சிஎஸ்கே

6வது இடத்தில் சிஎஸ்கே

இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் மோசமான போட்டிகளை சிஎஸ்கே வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. கடந்த 13 சீசன்களில் இல்லாதவகையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கேள்விக்குறியாகியுள்ளது.

136 ரன்கள் மட்டுமே குவிப்பு

136 ரன்கள் மட்டுமே குவிப்பு

தன்னுடைய அணியை மட்டுமின்றி தன்னுடைய சொந்த ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த தோனி, இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 136 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அவுட்டாகாமல் எடுத்த 47 ரன்கள் மட்டுமே இவரது சிறப்பான ஸ்கோராக உள்ளது. இதன் ஸ்டிரைக் ரேட் 132.40. சராசரி 27.20.

போட்டிகளுக்கு பிட்டாக இல்லை

போட்டிகளுக்கு பிட்டாக இல்லை

இந்நிலையில் தோனி உடலளவில் பிட்டாக உள்ளதாகவும் ஆனால் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவர் பிட்டாக இல்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார். வயதாகும்போது பிட்னஸ் குறைவது சகஜம் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அதற்கு ஏற்றாற்போல பயிற்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மியான்டட் அறிவுறுத்தல்

மியான்டட் அறிவுறுத்தல்

தோனி போட்டிகளில் விளையாடும்போது அவரது டைமிங் மிஸ் ஆவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் தனது சிட்-அப்ஸ், பேட்டிங் பிராக்டீஸ் உள்ளிட்டவற்றை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் மியான்டட் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் அவர் சிறப்பான ஆட்டங்களை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 18, 2020, 17:53 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
Dhoni's body positions were not right for certain shots -Miandad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X